க்யூ.ஆர். கோடு பயன்பாடு அதிகரிப்பு! ஆன்லைன் வாயிலாக கல்வியறிவு கற்பிக்கும் க்யூ.ஆர். கோடு முறைக்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மாநிலம் முழுவதும் நெட்வொர்க் இணைப்புகள் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

க்யூ.ஆர். கோடு பயன்பாடு அதிகரிப்பு! ஆன்லைன் வாயிலாக கல்வியறிவு கற்பிக்கும் க்யூ.ஆர். கோடு முறைக்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மாநிலம் முழுவதும் நெட்வொர்க் இணைப்புகள்

தமிழகத்தில் தற்போது பாடப்புத்தகங்களில் 'க்யூ.ஆர். கோடு' எனப்படும், குயிக் ரெஸ்பான்ஸ் கோடு தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது.

கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் ஜூன் 1 முதல் வழக்கம்போல் பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது மாணவர்களுக்கு வழங்கப்படும் பாடப்புத்தகங்களில் 'க்யூ.ஆர். கோடு' எனப்படும் குயிக் ரெஸ்பான்ஸ் கோடு தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது. மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் தேசிய டிஜிட்டல் தளமான தீக்ஷாவிடம் இருந்து கிடைத்துள்ள தகவலின்படி, ஜூன் 11 வரையில் 3.80 லட்சத்திற்கும் அதிகமானோர் க்யூ.ஆர். கோடுகளைப் பயன்படுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த க்யூ.ஆர். கோடுகளை ஸ்கேன் செய்வதன் மூலம் ஆண்ட்ராய்டு போன்களில் இந்தப் புத்தகங்களைப் படித்துக்கொள்ள முடியும். ப்ளே ஸ்டோரில் தீக்ஷா செயலியானது 89,066 முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

"ஆன்லைன் வாயிலாக கல்வியறிவு கற்பிக்கும் க்யூ.ஆர். கோடு முறைக்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மாநிலம் முழுவதும் நெட்வொர்க் இணைப்புகள் மற்றும் பாடப்புத்தகங்கள் அச்சிடும் தரம் ஒரு முக்கிய காரணியாக உள்ளது. ஒன்றாம், ஆறாம் மற்றும் ஒன்பதாம் வகுப்புகளுக்கான பாடத்திட்டங்களைத் தொகுத்து வழங்கும் தமிழகம் தற்போது, டிஜிட்டல் துறையிலும் முன்னணி மாநிலமாக உருவெடுத்துள்ளது" என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here