சட்டமன்றத்திற்கு 10 நாட்கள் விடுமுறை! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

சட்டமன்றத்திற்கு 10 நாட்கள் விடுமுறை!

நாளை முதல் வரும் 24 ஆம் தேதி வரை சட்டமன்றத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 15ஆம் தேதி துணை முதல்வர் பன்னீர்செல்வம், பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில், தமிழக சட்டமன்றத்தின் மானியக் கோரிக்கைக் கூட்டத் தொடர் கடந்த மே 29ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. தொடரில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளும் பல்வேறு துறைகளுக்கான மானிய விவாதங்களும் நடைபெற்றுவருகின்றன. வார விடுமுறையைத் தொடர்ந்து கடந்த 11, 12, 13ஆகிய தேதிகளில் வேளாண்மை, நெடுஞ்சாலை உள்ளிட்ட துறைகளுக்கு மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இன்று சுகாதாரத் துறைக்கான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.

கடந்த மே 24ஆம் தேதி நடைபெற்ற அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவில், ஜூன் 15ஆம் தேதி ரம்ஜான் பண்டிகைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை தினங்கள் தவிர, ஜூன் 18 முதல் 22 வரை 5 நாட்கள் பேரவைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், ஜூன் 15ஆம் தேதி முதல் 24-ம் தேதி வரை 10 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

அதன் பிறகு ஜூன் 25ஆம் தேதி மீண்டும் தொடங்கும் கூட்டத் தொடரானது ஜூலை 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here