காரியாபட்டி அருகே ஏழு சிலைகள் உடைப்பு: இராணுவ வீரர் கைது! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

காரியாபட்டி அருகே ஏழு சிலைகள் உடைப்பு: இராணுவ வீரர் கைது!


காரியாபட்டி அருகே உள்ள கோவிலில் நாளை திருவிழா நடைபெற உள்ள நிலையில், கோவிலின் சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக ராணுவ வீரர் ஒருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள மாங்குளம் என்னும் கிராமத்தில் செண்பகமூர்த்தி கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் நாளை (ஜூன் 15) திருவிழா நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவந்தன.

இந்நிலையில், 5 பேர் கொண்ட கும்பல் நேற்றிரவு கோவிலின் உள்ளே புகுந்து, அங்கிருந்த செண்பகமூர்த்தி, ராக்காயி அம்மன் உள்ளிட்ட 7 சிலைகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இன்று காலை (ஜூன் 14) திருவிழாவிற்கான ஏற்பாடுகள் செய்ய கோவிலுக்கு வந்த பூசாரி உள்ளிட்ட கிராம மக்கள் கோவிலில் சிலைகள் உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இது குறித்து, கிராம மக்கள் ஆதியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகார் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு, காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், கோவில் சிலைகளை உடைத்தது, அதே பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் ஆபிரகாம் லிங்கன், ராஜா மற்றும் இன்னும் 3 பேர் என்பது தெரியவந்தது. ஆபிரகாம் லிங்கன் மீரட்டிலும், ராஜா நாக்பூரிலும் ராணுவத்தில் பணியாற்றிவருகின்றனர்.

இவர்களில் ஆபிரகாம் லிங்கன் மட்டும் சிக்கினார். அவரை காவல் துறையினர் கைது செய்தனர். மற்ற நான்கு பேரையும் காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here