நோயாளிகளுக்கு மருத்துவக் காப்பீடை தாமதமாக அளிக்கும் காப்பீடு கம்பெனிகள் மீது அபராதம் விதிக்கப்படும். இதற்கான மருத்துவக்காப்பீடு விதிகள் திருத்தப்படும் என மத்திய அரசின் ஆயுஷ்மேன் பாரத் தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, ஆயுஷ்மேன் பாரத் தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டத்தின் மூத்த அதிகாரி ஒருவர் நேற்று(13.06.2018) பத்திரிகையாளர்களிடம் பேசியபோது கூறுகையில். மெடிக்கேர் என்றழைக்கப்படும் இந்த காப்பீடு பாலிசியில் காப்பீடு 15 நாட்களுக்கு மேல் தாமதமானால் அவர் காப்பீடாகக் கோரியிருந்த மொத்த தொகைக்கு 1 விழுக்காடு அபராதம் விதிக்கப்படும். அந்த தொகையானது காப்பீடுதாரருக்கு நேரில் அளிக்கப்பட வேண்டும். அதற்கு மேலும் தாமதமானால் கால தாமதத்தின் அடிப்படையில் அபராத விழுக்காடு கூட்டப்படும் எனத்தெரிவித்துள்ளார்.
சமூகபொருளாதாரம் மற்றும் சாதி கணக்கெடுப்பின் அடிப்படையில்,10.74 கோடி வறுமையிலுள்ள குடும்ப உறுப்பினர்கள் காப்பீடு திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர். எதிர்காலத்தில் மெடிக்கேர் காப்பீடு திட்டத்தின் கீழ் 50 கோடி மக்களை கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக