*💎ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களின் தரத்தை உயர்த்தும் வகையில், அக்கல்வி நிறுவனங்களுக்கு ரூ.1000 கோடி மானியம் வழங்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்*
*💎இந்தியாவில் சுமார் 800 பல்கலைக்கழகங்கள் உள்ளன. சர்வதேச தரவரிசை பட்டியலில் முதல் 200 இடங்களில் இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் எதுவும் இடம்பெறவில்லை*
*💎இந்நிலையில், ஐஐடி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியுள்ளது*
*💎டெல்லி, மும்பையில் உள்ள ஐஐடி, பெங்களூருவில் உள்ள ஐஐஎஸ்சி, மணிபால் அகடமி, ராஜஸ்தானில் உள்ள பிர்லா தொழில்நுட்ப அறிவியல் கழகம், உள்ளிட்ட 6 உயர்கல்வி நிறுவனங்களுக்கு மானியமாக சுமார் ரூ.1000 கோடி வழங்குகிறது*
*💎வருகிற 5 ஆண்டுகளில் இந்த மானியத்தொகை வழங்கப்பட உள்ளது என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். சர்வதேச தரம்மிக்க கல்வி நிறுவனங்களாக உயர்த்துவதற்காக இந்த நிதி வழங்கப்பட உள்ளதாக அவர் கூறினார்*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக