🔴🔴ஜூலை 18-க்குப் பிறகு பி.இ. ஆன்லைன் கலந்தாய்வு: அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

🔴🔴ஜூலை 18-க்குப் பிறகு பி.இ. ஆன்லைன் கலந்தாய்வு: அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்*

*🌐உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்தில் பி.இ. பொதுப் பிரிவு ஆன்லைன் கலந்தாய்வு வரும் 18-ஆம் தேதிக்குப் பிறகு தொடங்கப்படும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்*

*🌐சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிறகு நிருபர்களிடம் அவர் கூறியது: தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காண்பிக்கின்றனர்*

*🌐பி.இ. படிப்பில் சேர்ந்து விட்டு, அதன் பிறகு மருத்துவப் படிப்பை மாணவர்கள் தேர்வு செய்வதால் அவரது இடம் காலியாகவே உள்ளது. இதை தவிர்க்கவே எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு முதலில் நடத்தப்படுகிறது. சென்னையில் வரும் 16-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை 516 எம்.பி.பி.எஸ். நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்குக் கலந்தாய்வு நடைபெற உள்ளது*

*🌐எனவே, பி.இ. பொதுப் பிரிவு கலந்தாய்வை வரும் 18-ஆம் தேதிக்குப் பிறகு தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது*

*🔴🔴உச்ச நீதிமன்றத்தில் மனு*

*🌐பி.இ. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 1-ஆம் தேதியன்று வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளது*

*🌐தற்போதைய சூழலில் அந்தத் தேதியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகளைத் தொடங்க முடியாது என்பதைச் சுட்டிக்காட்டி விலக்குக் கோரி தமிழக அரசு சார்பில் உச்ச நீதின்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு மீதான விசாரணை வரும் 13-ஆம் தேதி வருகிறது*

*🌐அன்றைய தினம் (ஜூலை 13) உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பின் அடிப்படையில், பி.இ. மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதி குறித்து முடிவு செய்யப்படும்*

*🌐கடந்த ஆண்டும் உச்ச நீதிமன்றத்தில் அனுமதி பெறப்பட்டு பி.இ. வகுப்புகள் தொடங்கப்பட்டதால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை*

*🔴🔴எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். கலந்தாய்வு*

*🌐தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். முதல் கட்டக் கலந்தாய்வு கடந்த 7-ஆம் தேதியுடன் நிறைவடைந்துள்ளது. எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். முதல் கட்டக் கலந்தாய்வு நிறைவுக்குப் பிறகு, 669 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். காலியிடங்கள் உள்ளன*

*🌐மேலும், தனியார் மருத்துவக் கல்லூரிகள் சமர்ப்பித்துள்ள 516 எம்.பி.பி.எஸ். நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு வரும் 16-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெற உள்ளது. அதன் பிறகு பி.இ. பொதுப் பிரிவு ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கி தொடர்ந்து நடைபெறும்*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here