இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனம்: இன்னும் அமைக்கப்படாத 'ஜியோ கல்வி நிறுவனம்' பெயர் இடம்பெற்றதால் சர்ச்சை* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனம்: இன்னும் அமைக்கப்படாத 'ஜியோ கல்வி நிறுவனம்' பெயர் இடம்பெற்றதால் சர்ச்சை*

*🔴ரிலையன்ஸ் அறக்கட்டளையின் ஜியோ கல்வி நிறுவனம் இன்னும் அமைக்கப்படாத நிலையில் அது இந்திய அரசால் சிறந்த கல்வி நிறுவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது*

*🔴தன்னாட்சித் தகுதி, அதிக நிதி ஒதுக்கீடு, அமைவிடத்தின் நிலப்பரப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட வல்லுநர் குழு தேர்ந்தெடுத்துள்ளது*

*🔴இந்தப் பட்டியலில் உள்ள டெல்லி ஐஐடி, மும்பை ஐஐடி, பெங்களூர் இந்திய அறிவியல் நிறுவனம் ஆகியவை அரசின் கல்வி நிறுவனங்களாகும்*

*🔴பிட்ஸ் பிலானி, மணிப்பால் பல்கலைக்கழகம், ஜியோ கல்வி நிறுவனம் ஆகியவை தனியார் கல்வி நிறுவனங்களாகும்*

*🔴இவற்றில் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் ஜியோ கல்வி நிறுவனம் இன்னும் தொடங்கப்படவே இல்லை. இந்நிலையில் அதைச் சிறந்த நிறுவனமாகத் தேர்ந்தெடுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது*

*🔴இன்னும் தொடங்கப்படாத நிறுவனத்தைச் சிறந்த நிறுவனமாகத் தேர்ந்தெடுத்த காரணம் என்ன என மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட வல்லுநர் குழுவின் தலைவரான முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபால்சாமியிடம் ஒரு செய்தி நிறுவனம் கேட்டதற்கு அவர் பதிலளிக்க மறுத்தது குறிப்பிடத்தக்கது*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here