ஜாக்டோ-ஜியோ கோரிக்கை : பிளஸ் 1 துணைத் தேர்வுக்கு தாலுகா அளவில் தேர்வு மையம்* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ஜாக்டோ-ஜியோ கோரிக்கை : பிளஸ் 1 துணைத் தேர்வுக்கு தாலுகா அளவில் தேர்வு மையம்*

*📗பிளஸ்1 துணைத் தேர்வுக்கான தேர்வு மையங்கள் மாணவர்கள் வந்து செல்ல வசதியாக அருகருகே அமைக்க வேணடும் என்று ஜாக்டோ-ஜியோ கோரிக்கை வைத்துள்ளது*

*📘கடந்த மார்ச் மாதம் நடந்த பொதுத் தேர்வுகளில் பிளஸ் 1 தேர்வில் தோல்வி அடைந்த மாணவ, மாணவியருக்கு தற்போது சிறப்பு துணைத் தேர்வுகள் நடக்க உள்ளது. அதற்கான தேர்வு மையங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன*

*📘ஆனால், பல மாவட்டங்களில் இந்த தேர்வு மையங்கள் மாணவர்கள் விண்ணப்பித்த பகுதிகளில் இருந்து தொலைவில் அமைக்கப்பட்டுள்ளன. அதனால் மாணவ, மாணவியர் தேர்வு எழுதச் செல்வதற்காக அதிக நேரம் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது*

*📘சில இடங்களில் 100 கிமீ பயணித்து தேர்வு எழுத வேண்டிய நிலையும் உள்ளது*

*📘சொந்த ஊர்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டும் சில மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு பக்கத்து மாவட்டத்தில் தேர்வு மையம் அனுமதிக்கப்பட்டுள்ளது*

*📘சில இடங்களில் மாவட்டம் விட்டு மாவட்டம் தேர்வு மையம் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் அதிகாலை நேரத்தில் தேர்வு எழுத செல்ல வேண்டியுள்ளது*

*📗இதை தவிர்க்கும் வகையில் தாலுகா அளவில் தேர்வு மையம் அமைத்து அந்தந்த தாலுகாவை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு அதே தாலுகாவில் தேர்வு மையம் ஒதுக்க தேர்வு மையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜாக்டோ-ஜியோ கேட்டுக் கொண்டுள்ளது*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here