ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களுக்கு உயர்கல்வி உதவித்தொகை; புதிய நெறிகளை ஏற்று அரசாணை வெளியீடு* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களுக்கு உயர்கல்வி உதவித்தொகை; புதிய நெறிகளை ஏற்று அரசாணை வெளியீடு*


*💎ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களின் உயர்கல்வி உதவித்தொகைக்கான மத்திய அரசின் புதிய விதிமுறைகளை ஏற்று, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது*

*💎ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு உயர்கல்வியில் பட்டப்படிப்பு முதல், முனைவர் படிப்பு வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது*

*💎இதில் மத்திய அரசு உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டத்தில் கடந்த 2017-18-ம் ஆண்டில் மட்டும் 7 லட்சத்து 21 ஆயிரத்து 812 மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர்*

*💎இதுதவிர, மாநில அரசின் சிறப்பு திட்டத்தின் கீழ் 26,041 பேர் பயனடைந்துள்ளனர்*

*💎இத்திட்டத்தின் கீழ், ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்கள் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் உயர்கல்வியில் சேரும்போதும் அவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது*

*💎இந்நிலையில், சமீபத்தில் மத்திய அரசு நிர்வாக ஒதுக்கீட்டில் பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுவதை ரத்து செய்தது. மேலும், புதிய வழிகாட்டு நெறிமுறைகளையும் அமல்படுத்தியது*

*💎இதனால், ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களுக்கான உயர்கல்வி உதவித்தொகை முழுமையாக கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்தது*

*💎இதுதொடர்பாக, சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர்*

*💎இதற்கு பதிலளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், “புதிய வழிகாட்டு நெறிமுறைகள்படி மாநில அரசின் பொறுப்புத் தொகையை ரூ.1,526 கோடியே 46 லட்சமாக உயர்த்தி, மத்திய அரசு நிர்ணயித்துள்ளது*

*💎இந்த 2018-19-ம் ஆண்டுக்கான மொத்த தேவை, இந்தத் தொகைக்கு மேல் உயர வாய்ப்பில்லை என்பதால், இந்த நிதிச்சுமையை மாநில அரசே ஏற்று திட்டத்தை, தொடர்ந்து செயல்படுத்தும்” என்று தெரிவித்தார்*

*💎இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மத்திய அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு ஏற்று, அதன்படி புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here