குமரியில் 2 மையங்களில் நடக்கிறது: ஆன்ட்ராய்டு மொபைல் உதவியுடன் 9ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு புதிய பாடப்புத்தக பயிற்சி* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

குமரியில் 2 மையங்களில் நடக்கிறது: ஆன்ட்ராய்டு மொபைல் உதவியுடன் 9ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு புதிய பாடப்புத்தக பயிற்சி*

*🔴🔴   நிபந்தனை*

*🎯பயிற்சியில் கலந்துகொள்ளாதவர்கள் அடுத்து வெளி மாவட்டத்தில் கலந்துகொள்ளும் பயிற்சியில் பங்கேற்க வேண்டும் என்றும் நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது*

*🏀குமரி மாவட்டத்தில் 9ம் வகுப்பு புதிய பாடப் புத்தகம் தொடர்பாக ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு 2 மையங்களில் நடைபெற உள்ளது. தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்களை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் மாற்றியமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது*

*🏀நடப்பு 2018-19ம் கல்வியாண்டிற்கு முதல் கட்டமாக 1, 6, 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கான புதிய பாடப் புத்தகங்கள் பேராசிரியர்கள், வல்லுநர்கள், கல்வியாளர்கள் அடங்கிய பாடம் எழுதும் குழு அமைக்கப்பட்டு சிறப்பு அம்சங்களுடன் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் தயார் செய்யப்பட்டுள்ளது*

*🏀புதிய பாடத்திட்டத்தின்படி உருவாக்கப்பட்டுள்ள பாடப் புத்தகம் சிறந்த வல்லுநர்களால் மாணவர்கள் எளிதாகப் புரிந்துகொள்ளத் தக்க வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும் புத்தகங்களில் பக்கங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கியூ.ஆர்.கோடு போன்ற சிறப்பு அம்சங்களுடன் பாடப் புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது*

*🏀பாட புத்தகத்தில் தொடர்புடைய பாடங்களின் கூடுதல் தகவல்கள் வீடியோவாகவும், செயல்பாடுகளாகவும் இடம் பெற்றிருப்பதை மொபைல் போனில் கியூ.ஆர்.கோடு வழியாக ஸ்கேன் செய்து டவுன்ேலாடு செய்து மாணவர்களுக்கு பயிற்றுவிக்க முடியும். பாட புத்தகத்தில் உள்ள கியூ.ஆர்.கோடு அதற்கான கருவிகள் வழியாகவே ஸ்கேன் செய்ய இயலும். அதற்கு ஆன்ட்ராய்டு மொபைலை பயன்படுத்த கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது*

*🏀இந்தநிலையில் 9ம் வகுப்புகளுக்கான புதிய பாடநூல்கள் உருவாக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ள நிலையில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் கற்றல், கற்பித்தல் பணிகளை சிறந்த முறையில் வகுப்பறைகளில் மேற்கொள்ள புதிய பாடநூல்கள் குறித்து உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது*

*🏀இப்பயிற்சியில் 9ம் வகுப்பு பாடம் போதிக்கும் அனைத்து பாட பட்டதாரி ஆசிரியர்கள் கலந்துகொள்ள செய்ய அனைத்து அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பயிற்சியில் கலந்துகொள்ளும் ஆசிரியர்கள் பாட புத்தகத்துடன் மொபைல் டேட்டாவுடன் கூடிய ஆன்ட்ராய்டு மொபைல் போன் எடுத்துவர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்*

*🏀வரும் 9ம் தேதி இந்த பயிற்சி வகுப்பு தொடங்குகிறது*

*🏀21ம் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது. குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் பொன் ஜெஸ்லி பொறியியல் கல்லூரி, இலவுவிளை மார் எப்ரேம் பொறியியல் கல்லூரி ஆகியவற்றில் பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது*

*🏀9ம் வகுப்பிற்கு ஆங்கில பாடம் போதிக்கும் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆசிரியர்கள் இரண்டு பாட பயிற்சிகளிலும் கலந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பயிற்சியில் கலந்துகொள்ளாதவர்கள் அடுத்து வெளி மாவட்டத்தில் கலந்துகொள்ளும் பயிற்சியில் பங்கேற்க வேண்டும் என்றும் நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here