*🏀🏀 பாடங்களில் குறை இருந்தால், எனக்கு மின்னஞ்சலில், கருத்து தெரிவிக்கலாம்: பள்ளி கல்வி துறை செயலர் உதயசந்திரன்*
*🎯மாணவர்களை நீட் தேர்வுக்கு தயார்படுத்த, ஆசிரியர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்,'' என்று, பள்ளி கல்வித்துறை செயலர் உதய சந்திரன் கூறினார்*
*🎯பள்ளிக் கல்வித்துறை சார்பில், நடப்பாண்டு, 1, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில், புதிய பாடத்திட்டம் குறித்து, மாவட்ட கருத்தாளர்களுக்கான கருத்து கேட்பு கூட்டம், நேற்று நடந்தது*
*🎯இதில் ஆசிரியர்கள், பாடப்புத்தகம் எழுதியவர்கள், தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஈரோடு கலைமகள் கல்வி நிலையம், அரசு மகளிர் மேல்நிலை பள்ளி, திண்டல் வேளாளர் மகளிர் பள்ளிகளில், கூட்டம் நடந்தது. இவற்றில் பள்ளி கல்வித்துறை செயலர் உதய சந்திரன் பங்கேற்றார்*
*🎯ஈரோடு அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில், அவர் பேசியதாவது: நீட் தேர்வை அடிப்படையாக கொண்டு, 99 சதவீத பாடத்திட்டம், அமைக்கப்பட்டுள்ளது. தன்னம்பிக்கை ஏற்படும் வகையில் ஆசிரியர்கள் பாடங்களை நடத்த வேண்டும். இரண்டு ஆண்டுகளில், மாணவர்களை நீட் தேர்வில் வெற்றி பெற செய்யும் வகையில், தயார்படுத்த முடியுமா? என்ற கேள்வி இருந்தது*
*🎯எனவேதான், மாணவர்களை தயார்படுத்தும் விதமாக, அனைத்து விதமான போட்டி தேர்வுகளுக்கும், பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களை நீட் தேர்வுக்கு தயார்படுத்த, ஆசிரியர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். பாடங்களில் குறை இருந்தால், எனக்கு மின்னஞ்சலில், கருத்து தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக