*🔶உலகம் முழுவதும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 20 பேர் பட்டியலில் இவரும் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது*
*💫💫ரகசிய குறியீடு ஆராய்ச்சி*
*🔶சென்னையிலும் மும்பையிலும் இளமைக் காலத்தை கழித்த அபர்ணா, பள்ளிப்படிப்பிலேயே சாதனை புரிபவராக விளங்கினார். கணிதத்தில் ஆர்வம் கொண்ட இவர் பல சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ளார்*
*🔶மேலும் படிப்பில் மட்டுமல்லாமல், விளையாட்டுத் துறையிலும் சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளார்*
*🔶ரகசிய குறியீடுகள் மற்றும் நாணயங்கள் தொடர்பான பிளாக்செயின் கிளப்பில் முன்னோடியாக திகழ்ந்த இவர், இந்த தொழில் நுட்பத்தை மாணவர்கள் மற்றும் நிறுவனங்களிடம் பிரபலப்படுத்தும் முயற்சியல் ஈடுபட்டார்*
*🔶மேலும் ரகசிய குறியீடு மற்றும் பொருளாதார ஆராய்ச்சிக்கான முதல் சோதனை நிலையத்தையும் ( மெக்கானிசம் லேப்) இவர் ஏற்படுத்தினார்*
*🔶ஓமன், மெக்சிகோ, இந்தியா, ஹாங்காங் மற்றும் அமெரிக்காவில் பிளாக் செயின் பயிற்சி அளித்துள்ளார்*
*💫💫ஒரு லட்சம் டாலர் உதவி*
*🔶தற்போது தியேல் அறக்கட்டளை ஊக்கவிருதைப் பெறுவதன் மூலம், உலகின் தலைசிறந்த ரகசிய குறியீடு நிபுணர்கள் வரிசையில் இடம் பெறுகிறார்*
*🔶இளம் வயதிலேயே நிறுவனங்களைத் தொடங்கவும், சிறந்த பெரிய வழிமுறைகளைக் கண்டறியும் திறமையுள்ள இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த பெல்லோஷிப் வழங்கப்படுகிறது*
*🔶பே பால் நிறுவனத்தின் இணை நிறுவனரும், பேஸ்புக் அமைப்பின் துவக்க கால முதலீட்டாளருமான பீட்டர் தியேல் என்ற கோடீஸ்வரரின் ஆதரவுடன் ஒரு தனியார் அறக்கட்டளையாக தியேல் அறக்கட்டளை இயங்கி வருகிறது*
*🔶இதன் பெல்லோஷிப் பெறுபவர்களுக்கு ஒரு லட்சம் டாலர் உதவித் தொகையும், தியேல் அறக்கட்டளையைச் சார்ந்த தொழில்நுட்ப நிறுவனர்கள், முதலீட்டாளர்கள், விஞ்ஞானிகள் போன்றோரின் வழிகாட்டுதலும் இரண்டு ஆண்டுகளுக்கு கிடைக்கும்*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக