உலக சாதனை நிகழ்ச்சிக்காக பற்களால் காரை இழுத்து சென்ற பள்ளி மாணவன்* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

உலக சாதனை நிகழ்ச்சிக்காக பற்களால் காரை இழுத்து சென்ற பள்ளி மாணவன்*

*♈விழுப்புரத்தில் உலக சாதனை நிகழ்ச்சிக்காக பற்களால் இரண்டரை டன் காரை பள்ளி மாணவன் இழுத்துச்சென்று அசத்தினான்*

*♈விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் திருமால்(16) என்ற மாணவன் சுற்றுப்புற சுகாதாரத்தை பாதுகாக்கவும், தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தியும் உலக சாதனை முயற்சிக்காக விழுப்புரத்தில் இரண்டரை டன் எடையுள்ள காரை தனது பற்களால் இழுத்துச்சென்று அசத்தினார்*

*♈விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலை வேலைவாய்ப்பு அலுவலகம் முன்பு துவங்கிய இந்த நிகழ்ச்சியை எஸ்பி ஜெயக்குமார் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்*

*♈மாவட்ட விளையாட்டு அலுவலர் ஞானசேகரன், சுவாமி விவேகானந்தா யோகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்*

*♈இதனைத் தொடர்ந்து மாணவன் திருமால் காரை கயிறால் கட்டி அதனை தனது பற்களால் 600 மீட்டர் இழுத்துச் சென்று சாதனை படைத்தார். இது குறித்து மாணவர் கூறுகையில், தொடர்ந்து இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன்*

*♈3 கி.மீ தூரம் வரை பற்களால் இழுத்து உலக சாதனை படைக்க வேண்டும் என்பதே எனது லட்சியம் என கூறினார். தொடர்ந்து எஸ்பி ஜெயக்குமார் மாணவரை பாராட்டி சால்வை அணிவித்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மனித உரிமைகள் கழகம் செய்திருந்தது*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here