பிளஸ்1 வகுப்புக்கு 3 விதமான கம்ப்யூட்டர் புத்தகம் அறிமுகம் பணிச்சுமையால் ஆசிரியர்கள் அதிருப்தி* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

பிளஸ்1 வகுப்புக்கு 3 விதமான கம்ப்யூட்டர் புத்தகம் அறிமுகம் பணிச்சுமையால் ஆசிரியர்கள் அதிருப்தி*

*🔴பிளஸ்1 வகுப்புக்கு 3 விதமான கம்ப்யூட்டர் புத்தகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பணிச்சுமை அதிகரிப்பால் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்*

*🔴தமிழகத்தில் இந்த ஆண்டு பிளஸ்1 வகுப்புகளுக்கு புதிய பாடதிட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது*

*🔴ஒவ்வொரு பாடத்தின், புதிய பாடதிட்ட புத்தகங்கள் அதிக பக்கங்களை கொண்டதாகவும், தரமாக இருப்பதாக ஆசிரியர்கள் கூறி வருகின்றனர்*

*🔴அதன்படி பிளஸ்1 வகுப்புக்கு இந்த ஆண்டு 3 விதமான கம்ப்யூட்டர் பாடபுத்தகங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது*

*🔴கணிதம், கம்ப்யூட்டர் பிரிவுக்கு கம்ப்யூட்டர் அறிவியல் தொடர்பான பாடங்கள், கலைப்பிரிவுக்கு கம்ப்யூட்டர் பயன்பாடுகள், தொழிற்கல்வி பிரிவுக்கு கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் தொடர்பான பாடங்களும் இடம்பெற்ற புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது*

*🔴இதற்கு முன் பிளஸ்1, பிளஸ்2 வகுப்புக்கு ஒரே மாதிரியான புத்தகங்கள் தான் இருந்தது*

*🔴தற்போது அது 3 ஆக மாற்றப்பட்டுள்ளது. தொழிற்கல்வி பிரிவில் உள்ள 2 செய்முறை பாடத்தில் ஒரு பாடம் நீக்கப்பட்டு, அதற்கு பதில் கம்ப்யூட்டர் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளதாக தெரிவித்தனர்*

*🔴இதுகுறித்து கம்ப்யூட்டர் ஆசிரியர் சங்க மாநில நிர்வாகி ராஜ்குமார் கூறுகையில், நாமக்கல் மாவட்டத்தில் 9 அரசு பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. மற்ற பள்ளிகளில் ஒரு கம்ப்யூட்டர் ஆசிரியர் தான் பணியில் இருக்கிறார். தற்போது ஒவ்வொரு கம்ப்யூட்டர் ஆசிரியர்களும் குறைந்தபட்சம் வாரம் 21 பாடவேளை பாடம் நடத்த வேண்டியுள்ளது*

*🔴மாணவர்கள் அதிகம் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அதிக பாடவேளை ஒதுக்கப்படுகிறது*

*🔴ஆர்.புதுப்பாளையம் அரசு பள்ளி கம்ப்யூட்டர் ஆசிரியைக்கு வாரம் 40க்கும் அதிகமான பாடவேளைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. போதுமான அளவு கம்ப்யூட்டர் பாடபுத்தகம் இன்னும் பள்ளிகளுக்கு வந்து சேரவில்லை. ஆனால் இந்த மாதம் திருப்புதேர்வு நடத்த வேண்டியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here