*🖥பவர்பாயின்ட் மூலம் ஆங்கிலம், கணிதத்தை சுலபமாக கற்க பள்ளிகளில் சிறப்பு பயிற்சி வழங்கும் முறையை சென்னை மாநகராட்சி நாளை முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது*
*🖥சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் 32 மேல்நிலைப்பள்ளிகள், 36 உயர்நிலைப் பள்ளிகள், 1 உருது உயர்நிலைப்பள்ளி, 1 தெலுங்கு உயர்நிலைப்பள்ளி, 92 நடுநிலைப் பள்ளிகள் (தமிழ், தெலுங்கு மற்றும் உருது) 122 தொடக்கப்பள்ளிகள் மற்றும் 30 மழலையர் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. 98,857 மாணவ, மாணவர்கள் படித்து வருகின்றனர்*
*🖥4,041 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இப்பள்ளிகளில் கடந்த சில ஆண்டுகளாக மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை ஆண்டுந்தோறும் 20 சதவீதம் குறைந்து வருகிறது*
*🖥கல்வியின் தரம், அடிப்படை வசதிகளை மேம்படுத்தாததே மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதற்கு காரணமாக கூறப்படுகிறது.எனவே, கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கு சென்னை மாநகராட்சியின் கல்வி துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது*
*🖥அதன்படி, சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் ஆங்கிலம், கணிதத்தை சுலபமாக படிப்பதற்கு வசதியாக பயிற்சி வழங்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. இதை தொடர்ந்து, தனியார் நிறுவனம் மூலம் 50 ஆங்கில ஆசிரியர்கள், 50 கணித ஆசிரியர்களுக்கு சமீபத்தில் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது*
*🖥சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நாளை முதல் இப்பயிற்சியை தொடங்க சென்னை மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சிலர் கூறியதாவது*
*🖥மாணவ, மாணவிகள் ஆங்கிலம், கணித்தை கற்க தான் சிரமப்படுகின்றனர். எனவே, அவர்கள் சுலபமாக ஆங்கிலம், கணித்தை படிப்பதற்காக சிறப்பு பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளோம்*
*🖥ஆங்கிலத்தை ஒளியின் மூலமும், கணிதத்தை எளிய முறையிலும் பயிற்சி வழங்க உள்ளோம். ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சியில் நல்ல பலன் கிடைத்துள்ளது*
*🖥எனவே, 1ம் வகுப்பு முதல் 3ம் வகுப்புகளுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக, 10 பள்ளிகளில் இப்பயிற்சி வெள்ளிக்கிழமை (நாளை) துவங்கும்*
*🖥பவர் பாயின்ட் மூலம் பாடம் நடத்த திட்டமிட்டுள்ளோம். அதன் பிறகு, வெற்றி பெற்றால் படிபடியாக அனைத்து பள்ளிகளிலும் இந்த திட்டத்தை செயல்படுத்தவும் முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக