சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு.. மதிப்பெண்களை எப்படி அறிவது? - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு.. மதிப்பெண்களை எப்படி அறிவது?

 டெல்லி: சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. ... என்ற இணையதளம் மூலமோ அல்லது மாணவர்கள் பயிலும் பள்ளியிலோ மதிப்பெண்களை அறியலாம். மதிப்பெண் வழங்க 10, 11ஆம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்களில் தலா 30%, கணக்கிடப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்பில் நடந்த தேர்வில் 40% கொண்டு மதிப்பெண் கணக்கிடப்பட்டுள்ளது.கொரோனா இரண்டாவது அலையில் அதிகளவிலான பாதிப்புகளை இந்தியா சந்தித்தால் கடந்த மே மாதம் 4ந்தேதி நடைபெற இருந்த 12ம் வகுப்பு தேர்வுகளை சி.பி.எஸ்.இ. ஒத்திவைத்தது. ஆனால் தொற்று உச்சமானதால் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வுகள் குறித்து முடிவு எடுப்பதற்காக டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்ட கூட்டம் கடந்த ஜூன் 1ந்தேதி காணொலி காட்சி வழியாக நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் , நிர்மலா சீதாராமன், பியூஷ்கோயல்), பிரகாஷ் ஜவடேகர், தர்மேந்திர பிரதான், ஸ்மிரிதி இரானி , மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.தேர்வு ரத்துஇந்த கூட்டத்தில், சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு இறுதித்தேர்வுகளை ரத்து செய்வதாகபிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டார். சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு மாணவர்களின் முடிவுகளை (ரிசல்ட்) பொறுத்தமட்டில், நன்கு வரையறுக்கப்பட்ட புறநிலை அளவுகோலின்படி உரிய கால கட்டத்தில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை சி.பி.எஸ்.இ. மேற்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டதாக பிரதமர் மோடி அறிவித்தார்.எப்படி பார்ப்பதுஇதன்படி, 10, 11ஆம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்களில் தலா 30%, 12ஆம் வகுப்பில் நடந்த தேர்வில் 40% கொண்டு மதிப்பெண் கணக்கிடப்பட்டுள்ளது. இதன்படி, ... என்ற இணையதளம் மூலமோ அல்லது அந்தந்த பள்ளிகளிலோ மதிப்பெண் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளலாம்.தமிழகத்தில் எப்படிதமிழக பள்ளி கல்வி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஜூலை 19-ம் தேதி வெளியிடப்பட்டன. மாணவர்களின் 10, 11-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களில் தலா 35 சதவீதம், 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வில் 30 சதவீதம் என்ற அளவில் இறுதி மதிப்பெண் வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட இதே பாணியில் தான் சிபிஎஸ்இயும் 12 தேர்வு மதிப்பெண்களை வெளியிட உள்ளது.மாணவர் சேர்க்கைஇதனிடையே மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நீட் நுழைவுத் தேர்வு வரும் செப்டம்பர் 12 ம் தேதி நடைபெற உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. எந்த சூழலிலும் இந்த ஆண்டு நீட் தேர்வு ரத்து செய்யப்படாது என்று அறிவித்துள்ளது. இதனிடையே தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மதிப்பெண் அடிப்படையிலும். நுழைவுத் தேர்வு அடிப்படையிலும் அடுத்த மாதம் முதல் தொடங்க உள்ளது. கொரோனா காரணமாக நேரடியாக வகுப்புகள் தொடங்குவது தள்ளிப்போகிறது. ஆன்லைனில் மட்டுமே கல்லூரிகள் செயல்படும் என்று தெரிகிறது. கொரோனா குறைந்து இயல்பு நிலை திரும்பினால் மட்டுமே வழக்கமான நிலை ஏற்படும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here