*🌐சான்றிதழைத் தொலைத்த மாணவரை எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது*
*🌐விருதுநகர் மாவட்டம் புதுப்பட்டியைச் சேர்ந்த மாணவர் ஜி.பூபதி ராஜா. இவர் பிளஸ் 2 தேர்வில் 1,114 மதிப்பெண்ணும், நீட் தேர்வில் 236 மதிப்பெண்ணும் பெற்றுள்ளார்*
*🌐இவரது தந்தை முன்னாள் ராணுவ வீரர் என்பதால், மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ள, கடந்த 1-ஆம் தேதி சென்னை வந்த பூபதிராஜாவின் பையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்*
*🌐திருட்டுப்போன பையில், பிளஸ் 2 மதிப்பெண் சான்று, அசல் ஆதார் அடையாள அட்டை, நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண் சான்று உள்ளிட்ட அசல் சான்றிதழ்கள் பல இருந்தன. இதுகுறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்து*
*🌐இந்த நிலையில் கலந்தாய்வுக்குச் சென்ற பூபதிராஜா கலந்தாய்வு அதிகாரிகளிடம் விவரத்தைக் கூறியுள்ளார். ஆனால், கலந்தாய்வில் கலந்து கொள்ள மாணவர் பூபதிராஜாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த மாணவரின் நிலை குறித்து நாளிதழ்களில் செய்தி வெளியாகின*
*🌐இதனைப் படித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயணை நேரில் அழைத்து, மாணவர் பூபதிராஜாவை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று வாய்மொழியாக உத்தரவிட்டார்*
*🌐மேலும், இது தொடர்பாக தமிழக அரசின் விளக்கத்தைக் கேட்டு வியாழக்கிழமை (ஜூலை 5) தெரிவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக