எம்.பி.பி.எஸ்.: 62% இடங்களை பெற்ற மாநிலப் பாடத் திட்ட மாணவர்கள்* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

எம்.பி.பி.எஸ்.: 62% இடங்களை பெற்ற மாநிலப் பாடத் திட்ட மாணவர்கள்*

*🔶எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் கலந்தாய்வில் இதுவரை நிரம்பியுள்ள இடங்களில் 62 சதவீத இடங்களை மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் பெற்றுள்ளனர்*

*🔶தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் கலந்தாய்வு ஜூலை 1-ஆம் தேதி தொடங்கியது. பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 2-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது*

*🔶செவ்வாய்க்கிழமை (ஜூலை 3) வரை நடைபெற்ற கலந்தாய்வின் முடிவில் மொத்தம் அரசு கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ், தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தம் 1,421 இடங்கள் நிரம்பின*

*🔶62 சதவீத இடங்கள்: இவற்றில் 892 இடங்களை மாநிலப் பாடத் திட்ட மாணவர்களும், 460 இடங்களை சிபிஎஸ்இ மாணவர்களும், பிற பாடத்திட்ட மாணவர்கள் 69 இடங்களையும் பெற்றுள்ளனர்*

*🔶அந்த அடிப்படையில் பூர்த்தி செய்யப்பட்ட இடங்களில் 62.77 சதவீத இடங்களை மாநிலப் பாடத்திட்ட மாணவர்களும், 32.37 சதவீத இடங்களை சிபிஎஸ்இ மாணவர்களும், 4.9 சதவீத இடங்களைப் பிற பாடத்திட்ட மாணவர்களும் பெற்றுள்ளனர்*

*🔶தரவரிசைப் பட்டியலை வெளியிடுகையில் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், கலந்தாய்வில் 70 சதவீத இடங்கள் மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கும், 30 சதவீத இடங்கள் சிபிஎஸ்இ உள்ளிட்ட பிற மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கும் கிடைக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது*

*💫💫நிரம்பிய இடங்கள்*

*🔶புதன்கிழமை நடைபெற்ற கலந்தாய்வின் முடிவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 490 எம்.பி.பி.எஸ். இடங்கள், தனியார் கல்லூரிகளில் 265 அரசு ஒதுக்கீட்டு இடங்கள், அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 28 இடங்கள், தனியார் கல்லூரிகளில் 2 அரசு ஒதுக்கீட்டு பிடிஎஸ் இடங்கள் என மொத்தம் 869 இடங்கள் நிரம்பின*

*💫💫காலியிடங்கள் எத்தனை?*

*🔶கலந்தாய்வின் முடிவில் அரசு மருத்துவக் கல்லூரியில் 628, தனியார் கல்லூரிகளில் 537 அரசு ஒதுக்கீட்டு இடங்கள், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் 55, சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 24 இடங்கள் என மொத்தம் 1,244 எம்.பி.பி.எஸ். காலியிடங்கள் உள்ளன*

*🔶அதே போன்று அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 54, தனியார் கல்லூரிகளில் 963 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தம் 1,017 பிடிஎஸ் காலியிடங்கள் உள்ளன*

*🔶இன்றைய கலந்தாய்வு: பொதுப்பிரிவினருக்கு தொடர்ந்து வியாழக்கிழமையும் கலந்தாய்வு நடைபெற உள்ளது. தரவரிசை எண் 2381-இலிருந்து 4312 வரை பெற்ற மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது*

*🔶சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் காலை 9 மணிக்கு கலந்தாய்வு தொடங்கும்*

*💫💫தர வரிசைப் பட்டியலில் 8 மாணவர்கள்*

*🔶தமிழகத்தைச் சேர்ந்த, ஆனால் வெளிமாநிலத்தில் பிளஸ் 2 வரை படித்து, நீட் தேர்விலும் வெளிமாநிலத்தவர் என்று குறிப்பிட்டு தேர்வெழுதிய மாணவரில் ஒருவர், தனக்கு தமிழக மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்க இடமளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்*

*🔶வழக்கின் முடிவில் குறிப்பிட்ட மாணவரைக் கலந்தாய்வில் சேர்த்துக் கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே, அந்த மாணவரின் பெயர் தமிழக இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இணைக்கப்பட்டது*

*🔶அதன் காரணமாக அதே நிலையில் உள்ள பிற மாநிலத்திலிருந்து விண்ணப்பித்த தமிழகத்தை சொந்த மாநிலமாகக் கொண்ட 90 மாணவர்களின் பெயர்களை மருத்துவக் கல்வி இயக்ககமே புதிதாக தரவரிசைப் பட்டியலில் இணைத்தது*

*🔶இதனைத் தொடர்ந்து அரசு இடங்களுக்கு விண்ணப்பித்த 8 மாணவர்களின் பெயரும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பித்த ஒரு மாணவரின் பெயரும் மீண்டும் தரவரிசைப் பட்டியலில் புதன்கிழமை புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here