*🌐தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர ஒரு லட்சம் மாணவர்கள் தயாராக உள்ளனர் என உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார்*
*🌐தமிழகத்தில் கடந்த 7 ஆண்டுகளில் 4 பொறியியல், 16 பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் 56 கலை, அறிவியல் கல்லூரிகள் என 76 கல்லூரிகள் புதிதாகத் துவங்கப்பட்டுள்ளன. கலைக் கல்லூரிகளில் 1,585 பாடப் பிரிவுகள் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளன*
*🌐அரசு கல்லூரி மற்றும் உறுப்புக் கல்லூரிகளில் 20 சதவீத இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன*
*🌐பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் நிகழாண்டில் 1 லட்சத்து 59 ஆயிரத்து 631 பேர் ஆன்லைனில் பதிவு செய்தனர்*
*🌐இவர்களில் 1 லட்சத்து 9 ஆயிரத்து 850 பேருக்கு மட்டுமே சான்றிதழ் சரிபார்க்கப்பட்டுள்ளது. பதிவு செய்த சுமார் 49 ஆயிரம் பேர் வரவில்லை*
*🌐தற்போது, 1 லட்சத்து 4,453 மாணவர்கள் மட்டுமே கலந்தாய்வுக்குத் தயாராக உள்ளனர்*
*🌐கடந்த ஆண்டில் அரசு ஒதுக்கீட்டில் 1 லட்சத்து 2 ஆயிரம் பேரும், நிர்வாக ஒதுக்கீட்டில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேரும் சேர்ந்தனர்*
*🌐கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், நிகழ் ஆண்டில் விண்ணப்பித்தவர்கள் குறைவுதான்*
*🌐தற்போது கல்லூரிகளிலிருந்து 1 லட்சத்து 78 ஆயிரத்து 139 இடங்கள் அரசு ஒதுக்கீடாக உள்ளது*
*🌐நிர்வாக ஒதுக்கீட்டில் 18,500 இடங்கள் உள்ளன*
*🌐அந்த வகையில், பார்க்கும்போது தற்போது 1 லட்சத்து 4,453 மாணவர்கள் சேர்க்கைக்குத் தயாராக உள்ளனர்*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக