9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கணினி வழியில் பாடங்கள்: அமைச்சர் செங்கோட்டையன்* *🎯தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கணினி வழியில் பாடங்கள் பயிற்றுவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கணினி வழியில் பாடங்கள்: அமைச்சர் செங்கோட்டையன்* *🎯தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கணினி வழியில் பாடங்கள் பயிற்றுவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்*

*🎯விருதுநகர் அருகே உள்ள ஆமத்தூர் "ஏஏஏ' பொறியியல் கல்லூரியில் மண்டல அளவில் கல்வி அலுவலர்களுக்கான திறன் வளர் பயிற்சி, கனவு ஆசிரியர் விருது, புதுமை பள்ளி விருது வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது*

*🎯பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர் பிரதீப் யாதவ் தலைமை வகித்தார்*

*🎯இதில், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களைச் சேர்ந்த 35 ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது, 10 பள்ளிகளுக்கு புதுமை பள்ளி விருதை அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன், கே.டி. ராஜேந்திர பாலாஜி ஆகியோர் வழங்கினர்*

*🎯விழாவில், அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பேசியதாவது*

*🎯தமிழக பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன*

*🎯ஒன்பது, பத்தாம் வகுப்பு படிப்பவர்களுக்கு ஒரு சீருடை, பிளஸ் 1, பிளஸ் 2 படிப்பவர்களுக்கு ஒரு சீருடை, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலும் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஒரு சீருடை என மாற்றப்பட்டு, அடுத்த ஆண்டு முதல் அரசு சார்பில் வழங்கப்படும்*

*🎯மேலும், பள்ளிகளில் பொலிவுறு வகுப்புகள் செப்டம்பர் மாதத்துக்குள் உருவாக்கி தரப்படும். அதேபோல், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கணினி வழியே பயிற்றுவிக்கப்படும்*

*🎯ஆறாம் வகுப்பு, பிளஸ் 1 புதிய பாடத்திட்டத்தை பார்வையிட்ட சிபிஎஸ்இ குழுவினர், தரமானதாக உள்ளதாகப் பாராட்டினர்*

*🎯ஜிஎஸ்டி வந்த பிறகு ஆடிட்டர்களின் தேவை அதிகரித்துள்ளது*

*🎯எனவே, 25 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு திறமையான 500 அறிஞர்களை கொண்டு பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது*

*🎯மேலும், பிளஸ் 2 படித்தவுடன் வேலை கிடைக்கும் வகையில் "ஸ்கில் டெவலப்மென்ட்' குறித்த 12 பாடத்திட்டங்களும் சேர்க்கப்பட உள்ளன*

*🎯பெரும்பாலான அரசு பள்ளி ஆசிரியர்களின் முக்கிய கோரிக்கை கழிப்பிட வசதி மற்றும் அதை சுத்தம் செய்வதற்கு பணியாளர்கள் நியமிக்க வேண்டும் என்பதே*

*🎯இதற்காக செப்டம்பர் இறுதிக்குள் ஜெர்மனி நாட்டிலிருந்து ஆயிரம் வாகனங்கள் வாங்க ரோட்டரி கிளப் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது*

*🎯ஒரு வாகனத்தின் மூலம் தினமும் 20 பள்ளிகள் வரை கழிப்பறைகளை சுத்தம் செய்யலாம் என்றார்*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here