ஏழை மக்களுக்கு உதவும் வகையில் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ‘அன்புச்சுவர்’ திறக்கப்பட்டுள்ளது. - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ஏழை மக்களுக்கு உதவும் வகையில் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ‘அன்புச்சுவர்’ திறக்கப்பட்டுள்ளது.


வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிக்கும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதை தனியார் தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் செய்து வருகின்றனர். அந்த வகையில் ஏழை மக்கள் பயன்படுத்துவதற்காக ‘அன்புச்சுவர்’ எனப்படும் இலவச சேமிப்பு கிடங்குகள் பல இடங்களில் திறக்கப்பட்டுள்ளன.

தற்போது சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல ஆராய்ச்சி நிலைய மருத்துவமனையில் ‘இயல்வது கரவேல்’ என்ற வாசகத்துடன் ‘ஆத்திச்சூடி’ என்ற பெயரில் அன்புச்சுவர் திறக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் அரசர் சீராளர் கூறியிருப்பதாவது; எழும்பூர் குழந்தைகள் நலமருத்துவமனைக்கு நீண்ட நாட்கள் தங்கி சிகிச்சை பெறுவதற்காக ஏழை குழந்தைகள் வருகிறார்கள். இதனைத்தொடர்ந்து,ஏழை குழந்தைகளுக்கு உதவும் வகையில் ‘அன்புச்சுவர்’ அமைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

அதன் அடிப்படையில், தற்போது மருத்துவமனையின் தாய்ப்பால் ஊட்டும் தாய் சிலை அருகே ஏழை மக்களுக்காக‘அன்புச்சுவர்’ திறக்கப்பட்டுள்ளது. இதில் டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள், அவர்களுடைய உறவினர்கள், நண்பர்கள் வழங்கிய ஆடைகள், காலணிகள், புத்தகங்கள் வைக்கப்பட்டு உள்ளன.

ஆடை இல்லாமல் இருக்கும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அவர்களுடைய உயரம், எடைக்கு ஏற்ப விருப்பப்பட்ட துணிகளை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ‘அன்புச்சுவரில்’ பொதுமக்களும் தங்களுடைய பொருட்களை வைக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here