டெல்லியில் உள்ள படர்பூர் என்ற பகுதியில் இயங்கிவரும் மத்திய பள்ளியில் நேற்று அனைவருவரையும் அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையிலான சம்பவம் நடந்துள்ளது. மத்திய பள்ளியில் 7ஆம் வகுப்பு படிக்கும் மாணர்வர்களுக்கிடையே வகுப்பறையில் உள்ள இருக்கைக்கு தகராறு ஏற்பட்டுள்ளது.
வாய்த்தகராறு அதிகரித்துள்ள நிலையில், இரு மாணவர்களுக்கும் கிடையில் கைக்களப்பு ஏற்பட்டுள்ளது. அதில், ஒரு மாணவரை, மற்றொரு மாணவர் பிளேடால் தாக்கியுள்ளார். இந்த சம்பவம் பள்ளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவர் ANIக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருப்பதாவது; இது சம்பவம் குறித்து எனது வகுப்பாசிரியர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து. விசாரணை நடத்தி வருகின்றனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக