பள்ளி மாணவர்களுக்கு தேசிய அளவிலான அறிவியல் திறனறி தேர்வுக்கான பதிவுகள், ஜூலை 16ம்தேதி முதல் துவங்குகிறது.மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் கீழ், விஞ்ஞான் பிரசார் அமைப்பு செயல்படுகிறது.
இதன் மூலம், 'வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன்', என்ற தேசிய அளவிலான அறிவியல் திறனறி தேர்வுகள் கடந்த ஐந்தாண்டுகளாக நடத்தப்படுகிறது.
அறிவியல் ஆர்வமுள்ள மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், இத்தேர்வுகள் நடத்தப்படுகிறது.
வட்டார அளவில் துவங்கி, மாவட்டம், மாநிலம், தென் மண்டலம் மற்றும் தேசிய அளவில் நடத்தப்படுகிறது.
இத்தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, ஒரு நாள் சுற்றுலா, ரொக்கத்தொகை, சான்றிதழ் மற்றும் கேடயமும் வழங்கப்படுகிறது.
பள்ளி அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ், மாவட்ட அளவில் வெற்றி பெறுவோர் பல்வேறு ஆராய்ச்சிக்கூடங்களுக்கு அழைத்துச்செல்லப்படுகின்றனர்.
மாநில மற்றும் தேசிய அளவில் வெற்றி பெறுவோருக்கு ரொக்கப்பரிசு, சான்றிதழ், கேடயம் வழங்கப்படுகிறது.
கடந்தாண்டில், நடந்த தேர்வில், தமிழகத்தில் திருப்பூர் மாவட்ட அளவில் வெற்றிபெற்ற மாணவர்கள், கோவையிலுள்ள பறவைகள் ஆராய்ச்சி மையத்துக்குஅழைத்து செல்லப்பட்டனர்.
மேலும், தமிழகத்தைச்சேர்ந்த இரண்டு மாணவர்கள் தேசிய அளவிலும், தென்மண்டல அளவில் மூன்று பேரும் தேர்வாகினர். இதில் தேசிய அளவில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், மற்ற நாடுகளுக்கும் அனுப்பப்பட உள்ளனர்.
ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 1 வகுப்பு வரை அனைத்து பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும் இத்தேர்வில் பங்கேற்கலாம்.
தனிப்பட்ட முறையிலும் விண்ணப்பிக்க இம்முறை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.மாணவர்கள், vvm.org.inஎன்ற இணையத்தில் பதிவு செய்யலாம்.
ஜூலை 16ம் தேதி முதல் பதிவுகள் துவங்குகிறது. தேர்வு, நவ., மாதம் நடக்கிறது. இத்தேர்வு குறித்த கூடுதல் விபரங்களுக்கு, கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரானை, 9942467764 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக