தவறான வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்பிவிட்டால் என்ன செய்வது? - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

தவறான வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்பிவிட்டால் என்ன செய்வது?

ஆன்லைன் மூலம், பணத்தை ஒரு வங்கிக்கணக்கிலிருந்து இன்னொரு வங்கிக் கணக்குக்கு அனுப்பும்போது சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

ஒரே ஒரு எண் மாறினால்கூட சரியான நபருக்குப் போய்ச் சேரவேண்டிய பணம் எங்கோ இருக்கும் தவறான நபருக்குப் போய்ச் சேர்ந்துவிடும்.

இப்படி தவறான நபருக்கு நாம் பணத்தை

அனுப்பிவிட்டால், அந்தப் பணத்தை எப்படித் திரும்பப் பெறுவது..?

அந்தச் சூழ்நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும் என்கிற கேள்விகள் முக்கியமானவை.

 இந்தக் கேள்விகளுக்கான பதிலை யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் தலைமை மேலாளர் (ஓய்வு) ஷியாம் மனோகர் ஸ்ரீவத்சவாவிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

“ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு நெறிமுறைப்படி, பணப்பரிமாற்றம் செய்யும்போது சரியான பயனாளியின் கணக்கு எண் மற்றும் விவரங்களைக் கொடுப்பதற்கான முழுப்பொறுப்பும் பணம் செலுத்துபவரையே சாரும்.

 பணப்பரிமாற்றத்தில் தவறான அக்கவுன்டுக்குப் பணம் சென்றடைவது போன்ற தவறுகளுக்குப் பணம் செலுத்துபவரே பொறுப்பாளியாக வேண்டும்.

குறிப்பிட்ட வங்கியோ அல்லது பணம் தவறுதலாகப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ள கணக்குக்கு உரியவரோ எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here