வினாத்தாள் வெளியானதன் எதிரொலி சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகளில் ஜெராக்ஸ் வினாத்தாள்* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

வினாத்தாள் வெளியானதன் எதிரொலி சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகளில் ஜெராக்ஸ் வினாத்தாள்*

*♈சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகளில் வினாத்தாள் வெளியாவதை தடுக்க கடும் கட்டுப்பாடுகளுடன் ஆன்லைனில் வினாத்தாள் விநியோக முறைக்கு சிபிஎஸ்இ மாறியுள்ளது. சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் நாடு முழுவதும் கடந்த மார்ச் 5ம் தேதி தொடங்கி நடைபெற்றது*

*♈இதில் 12ம் வகுப்பு பொருளாதார தேர்வு மற்றும் 10ம் வகுப்பு கணித தேர்வு பாட வினாத்தாளும் வட மாநிலங்களில் வெளியானது. ஆனால், சிபிஎஸ்இ கல்வி வாரியம் அதை மறுத்து வந்தது*

*♈தேர்வினை சீர்குலைக்க சில சமூக விரோதிகள் முயற்சி செய்கின்றனர், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தது*

*♈பின்னர் 12ம் வகுப்பு பொருளாதார தேர்வு மற்றும் 10ம் வகுப்பு கணித தேர்வு மீண்டும் நடைபெறும் என்று சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவித்தது*

*♈சிபிஎஸ்இ வினாத்தாள் திருட்டு தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்திருந்தார்*

*♈எதிர்காலத்தில் சிபிஎஸ்இ வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகாதபடி தடுக்கப்படும் என அவர் உறுதியளித்திருந்தார்*

*♈சிபிஎஸ்இ வினாத்தாள் முன்கூட்டியே வெளியானது குறித்து பிரதமர் நரேந்திர மோடி  தனது அதிருப்தியை தெரிவித்ததுடன் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானது குறித்து கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டிருந்தார்*

*♈இந்தநிலையில் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மதிப்பெண் குறைந்தவர்களுக்காக வரும் ஜூலை மாதம் 16ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடத்தப்படுகின்ற மறு தேர்வுக்கு  வினாத்தாள் விநியோகத்தில் இரு கட்ட பாதுகாப்பு அம்சங்களை பரிசோதனை அடிப்படையில் செயல்படுத்த சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது*

*♈அந்த வகையில் தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் அரைமணி நேரத்திற்கு முன்னதாக இன்டர்நெட் வாயிலாக ஆன்லைனில் மட்டுமே விநியோகம் செய்யப்படும்*

*♈அப்போது அதனுடன் வழங்கப்படுகின்ற பாஸ்வேர்டு பயன்படுத்தி வினாத்தாள் பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுக்க வேண்டும்*

*♈பின்னர் அதனை ஜெராக்ஸ் எடுத்து மாணவர்களுக்கு வழங்க வேண்டும். ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் ஒவ்வொரு பாஸ்வேர்டு வழங்கப்படும்*

*♈தேர்வு மையங்களுக்கு வினாத்தாள்களை எடுத்து செல்லும்போது பணியாளர்கள் அதனை கையாளுவதை முற்றிலும் தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது*

*♈இருப்பினும் ஏற்கனவே வினாத்தாள் வெளியானபோது இதுபோன்ற புதிய முறையில் வினாத்தாள் விநியோகம் செய்யப்பட்டதில் பல்வேறு குளறுபடிகள் நிகழ்ந்தன. தேர்வுகள் நடத்துவதில் தாமதமும் ஏற்பட்டிருந்தது*

*♈இருப்பினும் இந்த தேர்வில் மிக குறைவான எண்ணிக்கையில் மாணவர்கள் பங்கேற்பதால் தேர்வில் பரிசோதனை அடிப்படையில் வினாத்தாள் விநியோகத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக சிபிஎஸ்இ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன*

*♈அதே வேளையில் 12ம் வகுப்புக்கு நடைபெறும் மறு தேர்வில் வழக்கமான நடைமுறையில் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது*

*♈இந்த முறை வெற்றிபெற்றால் வரும் கல்வியாண்டு முதல் அனைத்து தேர்வுகளிலும் ஆன்லைன் வழியாக வினாத்தாள் அனுப்பி வைக்கப்பட்டு பிரிண்ட் அவுட் எடுத்து விநியோகம் செய்யும் நடைமுறையை செயல்படுத்த சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here