🔴அண்ணா பல்கலை.யில் 270 ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: ராமதாஸ்* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

🔴அண்ணா பல்கலை.யில் 270 ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: ராமதாஸ்*

*🔶அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் 270 தற்காலிக ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்*

*🔶இதுதொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை*

*🔶அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி மற்றும் குரோம்பேட்டை வளாகங்களில் சுமார் 270 தற்காலிக ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்*

*🔶இது பல்கலைக்கழகத்தின் மொத்த ஆசிரியர் பணியிடங்களில் மூன்றில் ஒரு பங்காகும்*

*🔶தற்காலிக ஆசிரியர்கள் அனைவரும் அவரவர் சார்ந்த பாடங்களில் முனைவர் பட்டம் பெற்றவர்கள்*

*🔶முறையாக நேர்காணல் உள்ளிட்ட தகுதித் தேர்வுகள் மூலமாகத்தான் அனைவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்*

*🔶பணி அனுபவத்தின் அடிப்படையில் நிரந்தர உதவிப் பேராசிரியர்கள் மற்றும் இணைப் பேராசிரியர்களாக நியமிக்கப்பட தகுதி பெற்றவர்கள்*

*🔶ஆனாலும், அவர்களைப் பணி நிரந்தரம் செய்யாமல் பல்கலைக்கழக நிர்வாகம் துரோகம் செய்து வருகிறது*

*🔶தற்காலிக ஆசிரியர்கள் 6 மாத ஒப்பந்தத்தில் பணியமர்த்தப்படுகின்றனர்*

*🔶3 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து பணியாற்றினால் அவர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது பல்கலைக்கழக விதி*

*🔶பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்கள் அனைவரும் குறைந்தபட்சம் 5 முதல் 10 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகின்றனர்*

*🔶அதன்படி பார்த்தால் 270 தற்காலிக ஆசிரியர்களும் பணி நிரந்தரம் செய்ய தகுதியானவர்கள். ஆனால், அவர்களில் ஒருவர் கூட இன்னும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை*

*🔶இதைவிட மோசமான சமூக அநீதி இருக்க முடியாது*

*🔶இந்நிலையில், புதிய தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது*

*🔶இதனால், தங்களைப் பணி நீக்கம் செய்வதற்காகவே புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனரோ என்ற அச்சம் ஆசிரியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது*

*🔶ஆட்சிக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி 270 தற்காலிக ஆசிரியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here