இறக்குமதியைக் குறைத்த இந்தியா! ஈரான் நாட்டிடமிருந்து இந்தியா மேற்கொள்ளும் கச்சா எண்ணெய் இறக்குமதி சரிந்துள்ளது. ஈரானை அமெரிக்கா நெருக்கடிக்கு உள்ளாக்கி வருவது அனைவரும் அறிந்ததே. இந்தியா உள்பட அனைத்து நாடுகளும் ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதியைக் குறைக்க வேண்டும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்ததாகவும், இறக்குமதியைக் குறைக்காவிடில் கூடுதல் வரி - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

இறக்குமதியைக் குறைத்த இந்தியா! ஈரான் நாட்டிடமிருந்து இந்தியா மேற்கொள்ளும் கச்சா எண்ணெய் இறக்குமதி சரிந்துள்ளது. ஈரானை அமெரிக்கா நெருக்கடிக்கு உள்ளாக்கி வருவது அனைவரும் அறிந்ததே. இந்தியா உள்பட அனைத்து நாடுகளும் ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதியைக் குறைக்க வேண்டும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்ததாகவும், இறக்குமதியைக் குறைக்காவிடில் கூடுதல் வரி


ள் விதிக்கப்படும் எனவும் செய்திகள் எழுந்தன. இச்செய்தியைப் பெயர் கூற விரும்பாத சில அரசு அதிகாரிகளும் உறுதி செய்திருந்தனர். இந்நிலையில், ஜூன் மாதத்தில் ஈரானிடமிருந்து இந்தியா இறக்குமதி செய்த கச்சா எண்ணெய்யின் அளவு 15.9 விழுக்காடு சரிந்துள்ளது.

கப்பல் துறை அதிகாரிகள் வழங்கியுள்ள தகவல்களின்படி, ஜூன் மாதத்தில் ஈரானிடமிருந்து ஒரு நாளைக்கு 5,92,800 கச்சா எண்ணெய் பேரல்களை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. ஆனால், அதற்கு முந்தைய மே மாதத்தில் ஒரு நாளைக்கு 7,05,200 பேரல்களை ஈரானிடமிருந்து இந்தியா இறக்குமதி செய்திருந்தது. ஈரானின் கச்சா எண்ணெய் வாடிக்கையாளர்களில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளன. அமெரிக்காவின் எச்சரிக்கைக்கு ஏற்ப நடக்கும் வகையில், ஈரானுக்குப் பதிலாக மற்ற நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய்யைக் கொள்முதல் செய்யுமாறு சுத்திகரிப்பு ஆலைகளை இந்தியா அறிவுறுத்தியுள்ளது. தனியார் சுத்திகரிப்பு ஆலைகள் ஈரானிடமிருந்து எண்ணெய் கொள்முதலைக் குறைத்துக் கொண்டதால் ஜூன் மாதத்தில் இறக்குமதி சரிந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here