சேலம்: காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுவதால் 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் அங்குள்ள கபினி, கேஆர்எஸ் உள்ளிட்ட அணைகள் நிரம்பின. இதையடுத்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடும் நிலை ஏற்பட்டது. கர்நாடக அணையில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீர் காவிரி ஆற்றுக்கு திறந்துவிடப்படுகிறது.
இதையடுத்து காவிரி கரையோர பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை
16 கண்மாய்கள் .
இந்நிலையில் மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு 1.90 லட்சம் கனஅடியாக உயர்ந்துள்ளது. 1.75 லட்சம் கனஅடியிலிருந்து 1.90 லட்சம் கனஅடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் மட்டம் 120.05 அடியாக உள்ளது. அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீர் 16 கண்மாய்கள் வழியாக பாய்ந்தது.

10 வீடுகளை சூழ்ந்த வெள்ளம்
விவசாய நிலங்களிலும் வெள்ளம்
மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் தண்ணீர் சேலம் மாவட்டம் கோனேரிப்பட்டி அக்ரஹாரம் பகுதியில் மணக்காடு கிராமத்தில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்தது. இதையடுத்து அப்பகுதியில் இருந்த மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். மேலும் விவசாய நிலங்களிலும் தண்ணீர் புகுந்தது.

திருச்சி முக்கொம்பு
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம்
திருச்சி மாவட்டம் முக்கொம்புவுக்கு நீர்வரத்து 2.27 லட்சம் கனஅடியில் இருந்து 2.34 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. மேலும் கொள்ளிடத்தில் இருந்து 1.67 லட்சம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இந்நிலையில் திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையின் அனைத்து படிக்கட்டுகளும் தண்ணீரில் மூழ்கியதால் அங்கிருந்த புரோகிதர்கள் வெளியேற்றப்பட்டனர்.

கரைபுரளும் வெள்ளம்
12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. காவிரிக் கரையில் இருந்த ஒரு கோயிலையும் வெள்ளம் சூழ்ந்து கொண்டது. மேட்டூர் அணையிலிருந்து 1.90 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், புதுகோட்டை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காவிரி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம்... 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
பாதுகாப்பான இடங்கள்
கண்காணிப்பு
மேலும் காவிரி கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். காவிரி கரையோர பகுதிகளை மத்திய நீர் வளத்துறை அதிகாரிகள், பொதுப் பணித் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.