- STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad



இடமாற்றம்

தமிழகத்தில் மூத்த ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இதில் உ.யர்கல்வித்துறை செயலர் சுனீல் பாலிவால், மற்றும் மதுரை மாவட்ட கலெக்டர் உள்பட பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில்,சென்னை மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் கடலூர் மாவட்டத்திற்கும், மதுரை மாவட்ட கலெக்டர் வீரராக ராவ், ராமநாதபுரம் மாவட்டத்திற்கும், 

ராமநாதபுரம் கலெக்டராக இருந்த நடராஜன் மதுரைக்கும், சிவகங்கை மாவட்ட கலெக்டராக ஜெயகாந்தன், பள்ளிக்கல்வித்துறை செயலர் உதயச்சந்திரன் தொல்லியல் துறைக்கும், 

திருவள்ளூர் கலெக்டராக இருந்த சுந்தரவல்லி, வணிகவரித்துறை இணை கமிஷனராகவும், 

கடலுார் கலெக்டராக இருந்த தண்டபாணி, எழுதுபொருட்கள் மற்றும் அச்சுதுறை இயக்குனராகவும், சிவகங்கை கலெக்டராக இருந்த லதா, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை இணை செயலராகவும், 

பெண்கள் நகர்ப்புற மேம்பாட்டுதுறை உதவி இயக்குனராக இருந்த ஆனி மேரி ஸ்வர்ணா, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துணை இயக்குனராகவும், 

ஈரோடு மாவட்ட கலெக்டராக கதிரவன், சென்னை மாவட்ட கலெக்டராக சண்முக சுந்தரம், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டராக பிரபாகர்,உயர்கல்வித்துறை செயலராக மங்கத்ராம் ஷர்மா உள்ளிட்ட மூத்த ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். 

இதற்கான உத்தரவை தமிழக தலைமை செயலாளர் பிறப்பித்துள்ளார்._



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here