கிருமிகளை நீக்கி நோய் எதிர்ப்பு சக்தியை தரும் கஞ்சி - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

கிருமிகளை நீக்கி நோய் எதிர்ப்பு சக்தியை தரும் கஞ்சி





முருங்கையிலை கண்டந்திப்பிலிக் கஞ்சி

முருங்கையிலை கண்டந்திப்பிலிக் கஞ்சிதேவையான பொருட்கள்பச்சரிசி நொய் – 150 கிராம்
முருங்கையிலை – ஒரு கைப்பிடி
வாய்விடங்கம் – 10 கிராம்
கண்டந்திப்பிலி – 10 கிராம்
மிளகு – 10
இந்துப்பு – தேவையான அளவு
மோர் – 200  மி.லிசெய்முறை
  • முதலில் ஒரு பாத்திரத்தில்  ஒன்றரை லிட்டர் தண்ணீர் ஊற்றவும்.
  • அதில் வாய்விடங்கம், கண்டந்திப்பிலி, மிளகு மற்றும் முருங்கையிலையை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
  • நீரை கொதிக்க வைத்து  400 மி.லி அளவாக சுண்ட வைக்கவும்.
  • பின்பு சுண்ட வைத்த நீரில் பச்சரிசி நொய்யை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
  • கொதித்த கஞ்சியில் தேவையான அளவு இந்துப்பு சேர்த்து கஞ்சியாக்கி  கொள்ளவும்.
  • இறுதியில் கஞ்சியுடன் மோர் சேர்த்து நன்றாக கலக்கி இறக்கி வைக்கவும்.
பயன்கள்இந்தக் கஞ்சியை நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவாக உள்ளவர்கள் தொடர்ந்து குடித்து வந்தால் உடலில் உள்ள கிருமிகளை நீக்கி நோய் எதிர்ப்பு ஆற்றைலை அதிகரிக்க செய்யும் அற்புதமான கஞ்சி.குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

Subscribe Here