சென்னை : தமிழ்நாட்டில் உள்ள பள்ளிப் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் தமிழறிஞர்கள், கவிஞர்கள், அரசியல் தலைவர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள் உள்பட தலைவர்களின் பெயருக்கு பின்னால் இருக்கும் சாதிப்பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் ஐ லியோனி தலைமையிலான தமிழ்நாடு பாடநூல் கழகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது."தமிழ்நாட்டின் சாலைகள், தெருக்கள் மற்றும் அலுவலக கட்டடங்களுக்கு தலைவர்களின் பெயர் சூட்டப்படும்போது அவர்கள் பெயரின் பின்னால் இருக்கும் சாதிப்பெயர் இடம்பெறக்கூடாது" என்று தமிழ்நாடு அரசால் அரசானை வெளியிடப்பட்டு நடைமுறையில் இருக்கிறது.இதன்படியே தமிழ்நாடு பாடநூல் கழகம் சாதி பெயர்களை பாடப்புத்தகத்தில் இருந்தும் நீக்கும் நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது.பாடப்புத்தகம்தமிழ்நாட்டில் உள்ள பள்ளிப் பாடப்புத்தகத்தில் தமிழறிஞர்கள், கவிஞர்கள், அரசியல் ஆளுமைகள் உள்ளிட்ட தமிழ்த்தலைவர்கள் பெயர்கள் நீண்ட காலமாக அவர்களின் சாதி பெயர்களுடன் தான் இருந்து வருகின்றன. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, பாடப்புத்தகங்களில் உள்ள தலைவர்களின் பெயருக்கு பின்னால் உள்ள சாதிப்பெயர்களை நீக்கியிருக்கிறது .12ம் வகுப்பு பாடம்தமிழ்நாடு பாடநூல் கழகம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளின் படி, 12ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இருக்கும் "பண்டைய காலத்து பள்ளிக்கூடங்கள்" என்ற பாடப்பகுதியில், தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாத ஐயர் என்றிருந்த பெயர் தற்போது உ.வே.சாமிநாதர் என மாற்றப்பட்டிருக்கிறது.ராமலிங்கம் பிள்ளைஅதேபோல் மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்பதை மீனாட்சி சுந்தரனார் என்று மாற்றப்பட்டிருக்கிறது. மேலும் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை என்பதை ராமலிங்கம் எனவும் மாற்றி தமிழ்நாடு பாடநூல் கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.பாடநூல் கழகம்மேலும் தமிழின் முதல் நாவலாசிரியரின் மாயூரம் வேதநாயகம் பிள்ளை என்ற பெயரை வேதநாயகம் என்று மாற்றி உள்ளது. இலங்கையைச் சேர்ந்த தமிழறிஞரான சி.வை.தாமோதரம் பிள்ளை என்ற பெயரை சி.வை.தாமோதரம் என்று மாற்றி உள்ளது.இதேபோல் தான் பல்வேறு தலைவர்களின் பெயருக்கு பின்னால் இருக்கும் சாதிப்பெயரை நீக்கி தமிழ்நாடு பாடநூல் கழகம் புதிய திருத்தம் மேற்கொண்டு உள்ளது. விரைவில் அனைத்து வகுப்பு பாடப்புத்தகங்களிலும் சாதிகளை நீக்கும், பெயர் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக