HI TECH LAB - BATCH II ( 23.08.2021 - 27.08.2021 ) ஆசிரியர்கள் சுய பதிவு செய்வதற்கான வழிமுறைகள் ஆசிரியர்கள் - இப்பயிற்சியில் பங்கேற்க EMIS ல் தாங்களாகவே பதிவு செய்ய வேண்டும். - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

HI TECH LAB - BATCH II ( 23.08.2021 - 27.08.2021 ) ஆசிரியர்கள் சுய பதிவு செய்வதற்கான வழிமுறைகள் ஆசிரியர்கள் - இப்பயிற்சியில் பங்கேற்க EMIS ல் தாங்களாகவே பதிவு செய்ய வேண்டும்.

 

HI TECH LAB - BATCH II ( 23.08.2021 - 27.08.2021 ) ஆசிரியர்கள் சுய பதிவு செய்வதற்கான வழிமுறைகள் ஆசிரியர்கள் - இப்பயிற்சியில் பங்கேற்க EMIS ல் தாங்களாகவே பதிவு செய்ய வேண்டும்.

 அதற்கான வழிமுறைகள் பின்வருமாறு :

        Android கைப்பேசியில் TN EMIS App யினை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். 

        TN EMIS App யில் Teacher ID ( 8 digit ) மற்றும் password யினை பயன்படுத்தி login செய்ய வேண்டும் . password EMIS யில் பதிவு செய்யப்பட்ட கைப்பேசியின் முதல் நான்கு இலக்கு @ பிறந்த வருடம். 

        Login செய்ததும் click Teacher Training Module Select training யினை Click செய்யவும். அதில் தற்பொழுது கலந்துக் கொள்ளும் பயிற்சியின் தலைப்பினை ( ICT Training ) தெரிவு ( Select ) செய்ய வேண்டும். 

    பின்பு பயிற்சி மையத்தினை ( Training venue ) Click செய்யவும் . ஒன்றியத்திலுள்ள ( Block ) அனைத்து உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள் உள்ள ( Hi - Tech Lab ) பள்ளியின் பெயர்கள் காட்சிபடுத்தப்படும் . அதில் பயிற்சியில் கலந்துக் கொள்ள தங்கள் பள்ளி மையமாக இருப்பின் அப்பள்ளியினை தெரிவு ( select ) செய்து submit / save செய்ய வேண்டும் . தங்கள் பள்ளி பயிற்சி மையமாக இல்லை எனில் அருகிலுள்ள பள்ளியின் பெயரை தெரிவு ( select ) செய்து submit / save செய்ய வேண்டும். 

       அவ்வாறு submit'save செய்யும் பொழுது அம்மையத்தில் பயிற்சியில் கலந்துக் கொள்ள காலியிடம் இருக்கும் பட்சத்தில் Registered successfully என காண்பிக்கப்படும். 

        இவ்வாறு ஆசிரியர்கள் தங்களுக்கான பயிற்சி மையங்களை தெரிவு செய்து வரும் பொழுது அம்மையங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கை குறைந்துக் கொண்டு வரும். 

    எனவே ஆசிரியர்கள் login செய்யும் பொழுது உயர் தொழில் நுட்ப ஆய்வகத்தில் உள்ள கணினி இணைப்புகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப காலியாக இருக்கும் பயிற்சி மையங்களின் பெயர் மட்டுமே காண்பிக்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here