வேதியியல்
1. தனிமங்கள் மற்றும் சேர்மங்கள்
1. இதுவரையில் கண்டறியப்பட்டுள்ள தனிமங்களின் எண்ணிக்கை - 118
2. புவியில் மிக அதிகளவில் உள்ள தனிமம் - ஆக்ஸிஜன்
3. அறை வெப்பநிலையில் நீர்மமாக உள்ள உலோகம் - மெர்குரி
4. அறை வெப்பநிலையில் நீர்மமாக உள்ள அலோகம் - புரோமின்
5. அண்டம் மற்றும் விண்மீன்களில் உள்ள முக்கியமான தனிமங்கள் - ஹைட்ரஜன், ஹீலியம்
6. அதிக உருகுநிலை கொண்ட உலோகம் - டங்ஸ்டன்
7. முதன்முதலில் தனிமங்களை உலோகங்கள் மற்றும் அலோகங்கள் என வகைப்படுத்தியவர் - லவாய்சியர்
8. இரும்பை கால்வனைசிங் செய்ய பயன்படும் உலோகம் - சிங்க்
9. சோடியம் குளோரைடு, கால்சியம் குளோரைடு, மெக்னீசியம் குளோரைடு போன்றவை எதற்கான உதாரணம் - அயனிச் சேர்மங்கள்
10. அயனிச் சேர்மங்களின் பொதுவான குணம் ஒன்று - நீரில் எளிதில் கரையும்
11. பெரும்பாலான சகபிணைப்புச் சேர்மங்கள் எந்நிலையில் இருக்கின்றன - வாயுக்களாகவோ, திரவங்களாகவோ உள்ளன.
12. சகபிணைப்புச் சேர்மங்கள் எதில் நன்கு கரையும் - பென்சீன், கார்பன் டெட்ரா குளோரைடு, ஈதர்.
13. சோப்பு தயாரிக்கும் தொழிலில் அதிகம் பயன்படும் சேர்மம் எது - சோடியம் ஹைட்ராக்ஸைடு
14, தனித்த நிலையிலும் சேர்மங்களாக உள்ள அலோகங்கள் - நைட்ரஜன், ஹைட்ரஜன், கார்பன் மற்றும் சல்பர்.
2. அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்
15. அசிடஸ் என்ற இலத்தீன் மொழிச்சொல்லின் பொருள் – அமிலம்
16. தாவரங்களிலிருந்தும் விலங்குகளிலிருந்தும் பெறப்படும் அமிலங்கள் - எனப்படும். - கரிம அமிலங்கள்
17. தாது பொருள்களிலிருந்து பெறப்படும் அமிலங்கள் --- எனப்படும். - கனிம அமிலங்கள்
18. அமிலங்கள் நீரில் கரைக்கப்படும் போது ---- அயனிகளைக் கொடுக்கிறது ' ஹைட்ரஜன்
19. காரங்கள் நீருடன் சேரும்போது ---- அயனிகளைக் கொடுக்கிறது. ' ஹைட்ராக்ஸைடு
20. நீரில் கரையும் காரங்களுக்கு ------- என்று பெயர் – அல்கலிஸ்
21. வேதிப்பொருட்களின் அரசன் என்று அழைக்கப்படுவது - கந்தக அமிலம்
28. உலகில் அதிக வலிமை மிக்க அமிலம் எது - .புளுரோ சல்பியூரிக் அமிலம் (HFSO3)
23. அமில நீக்கி எனப்படுவது - மெக்னீசியம் ஹைட்ராக்ஸைடு
24. நீல லிட்மஸை சிவப்பாக மாற்றுவது - அமிலம்
25. சிவப்பு லிட்மஸை நீல நிறமாக மாற்றுவது – காரம்
26. எறும்பு கடிக்கும்போது, நம் உடம்பினுள் செலுத்தப்படுவது - பார்மிக் அமிலம்
27. பெர்ரஸ் சல்பேட் உப்பின் நிறம் - இளம் பச்சை
28. முகரும் உப்பு (Smelling salts) என்பது - அம்மோனியம் கார்பனேட்
29. பொதுவாக ஒரு அமிலமும் காரமும் நடுநிலையாக்கல் வினையில் ஈடுபடும்போது உருவாகும் அயனிச் சேர்மங்கள் - உப்பு
வேதியியல்
30. ஆக்சிஜனேற்றம் மற்றும் ஆக்ஸிஜன் ஒடுக்கம்
31. ஒரு வேதிவினையில் ஆக்ஸிஜன் சேர்க்கப்படுதலோ ஹைட்ரஜன் நீக்கப்படுதலோ எலக்ட்ரான்கள் நீக்கப்படுதலோ நிகழும்போது அந்த வினை ---- எனப்படுகிறது. ' ஆக்ஸிஜனேற்றம்
32 அமிலமேற்றப்பட்ட பொட்டாசியம் டைகுரோமேட் சிறந்த --- ஆகும் - ஆக்ஸிஜனேற்றி
33. ஒரு தனிமம் எலக்ட்ரானைப் பெறுமாயின் அது - எதிர்மறை ஆக்சிஜனேற்றம்
34. வேதிவினைகளில் எலக்ட்ரான்களை இழக்கும் பொருட்கள் ---- ஆகும் - ஒடுக்கும் பொருட்கள் அல்லது ஒடுக்கிகள்
35. ஆக்சிஜனை சேர்த்தல் அல்லது ஹைட்ரஜனை நீக்கல் - ஆக்சிஜனேற்றம்
36. ஹைட்ரஜனை சேர்த்தல் அல்லது ஆக்சிஜனை நீக்கல் - ஒடுக்கம்
37. ஒரு மூலக்கூறில், பிற எல்லா அணுக்களும் அயனிகளாக வெளியேறிய பின் அணுவின் மீதுள்ள எஞ்சிய மின்னூட்டமே தனிமத்தின் --- ஆகும். ஆக்சிஜனேற்ற எண்
38. எல்லா சேர்மங்களிலும் : ப்ளோரினின் ஆக்சிஜனேற்ற எண் - -1
39. பொதுவாக எல்லா சேர்மங்களிலும், ஹைட்ரஜனின் ஆக்சிஜனேற்ற எண் - +1
40. Cr20-யில் காணும் குரோமியத்தின் ஆக்சிஜனேற்ற எண் - +6
41. ஒரு வேதிவினையில் ஒரு தனிமத்தின் ஆக்சிஜனேற்ற எண் அதிகரிப்பது - ஆக்ஸிஜனேற்றம்
42. ஒரு வேதிவினையில் ஒரு தனிமத்தின் ஆக்சிஜனேற்ற எண் குறைவது - ஆக்ஸிஜன் ஒடுக்கம்
43. REDOX என்பதன் விளக்கம் - ஆக்சிசனேற்ற மற்றும் ஒடுக்கம் (Oxidation - Reduction)
44. H2O2, BaOz, NapO2 போன்ற பெர்ஆக்சைடுகளில் ஆக்சிஜனின் ஆக்சிஜனேற்ற
எண் - -1
45. உலோக ஹைட்ரைடுகளில் ஹைட்ரஜனின் ஆக்சிஜனேற்ற எண் - -1
. தாதுக்கள் மற்றும் உலோகங்கள்
46. எந்த ஒரு குறிப்பிட்ட கனிமத்தில் இருந்து சேர்மநிலையில் உலோகம், எளிதாக லாபகரமான முறையில், பெருமளவு பிரித்தெடுக்க முடிந்தால் அந்த கனிமம் --- எனப்படும். - தாது
47.மாக்னசைட், டாலமைட், கார்னலைட், எப்சம் உப்பு போன்றவை எதன் தாதுக்கள் - மக்னீசியம்
48.. மேக்னடைட் ஹேமடைட், சிட்ரைட், லிமோடைட், இரும்பு கந்தகக்கல் ஆகியன எதன் தாதுக்கள் - இரும்பு
49.மிகவும் லேசான உலோகம் -- ஆகும் - லித்தியம்
50. மிகவும் கனமான உலோகம் எது - ஆஸ்மியம்
56. X கதிர்கள் ஊடுருவாத உலோகம் --- ஆகும் – காரியம்
57. தாவரங்களின் பச்சையத்தில் காணப்படும் உலோகம் - மெக்னீசியம்
58. தங்க நகைகளில் KDM 916 என்று குறிக்கப்பட்டு இருப்பதில் KDM என்பது -
காட்மியம்
59. ரூடைல், இல்மடைட் ஆகியவை எதன் தாதுக்கள் - டைட்டானியம்
60. மாலகைட், தாமிரபைரைட், காப்பர் கிளான்ஸ், க்யூப்ரைட் ஆகியவை எதன் தாதுக்கள் - தாமிரம்
61. தாதுவுடன் உள்ள மாசுகளை (காங்கு) உருகிடும் சேர்மமாக மாற்றி அதை நீக்கிட தாதுவுடன் சேர்க்கும் பொருள் - இளக்கி
62. மிகவும் லேசான தனிமம் எது - ஹீலியம்
63. நீர்ம நிலையிலுள்ள உலோகம் எது - பாதரசம்
64. மின்கடத்தும் திறன் அதிகம் கொண்ட உலோகம் - வெள்ளி
65. மின்சாரக் கம்பியாக அதிகம் பயன்படுத்தப்படும் உலோகம் - தாமிரம்
கார்பன், நைட்ரஜன் மற்றும் அதன் சேர்மங்கள்
71. கார்பனின் அணு எண் எத்தனை - 6
72 கார்பனின் குறியீடு ---- ஆகும் - C
73. கார்பனின் அணுநிறை எத்தனை - 12
74. கார்பன் எத்தனை இணைதிறனை உடையது – 4
75. கார்பன் காற்றிலுள்ள ஆக்ஸிஜனுடன் வினைபுரிந்து --- ஆக மாறுகிறது - கார்பன் - டை - ஆக்ஸைடு
76. கார்பனின் மூன்று விதமான புறவேற்றுமை வடிவங்கள் யாவை - படிகவடிவம் உள்ளவை (வைரம், கிராபைட்டு), படிகவடிவம் அற்றவை (நிலக்கரி, மரக்கரி), புல்லிரீன்
77. கார்பனின் சேர்மங்களைப் பற்றி விவரிக்கும் வேதியியல் ----- ஆகும் - கரிம வேதியியல்
78. கார்பனோடு ஹைட்ரஜன் சேரக் கிடைப்பது ---- ஆகும் - ஹைட்ரோ கார்பன்
79. நைட்ரஜனின் அணு எண் எத்தனை - 7
80. நைட்ரஜனின் குறியீடு ----- ஆகும் - N
81. வளிமண்டலத்தில் காணப்படும் நைட்ரஜனின் சதவீதம் - 78.1%
82. சிரிப்பூட்டும் வாயு என்று அழைக்கப்படுவது எது - நைட்ரஸ் ஆக்ஸைடு
83. நைட்ரஜனும் ஆக்ஸிஜனும் சேரக்கிடைப்பது - நைட்ரிக் ஆக்ஸைடு
84. திண்ம நைட்ரஜனின் இரு புறவேற்றுமை வடிவங்கள் - ஆல்பா, பீட்டா நைட்ரஜன்
85. நைட்ரஜனும், ஹைட்ரஜனும் சேர்ந்து அம்மோனியா உருவாகும் செயல் முறை -- --- ஆகும். - ஹேபர் செயல்முறை
6. உரங்கள், பூச்சிக் கொல்லிகள்
86 இயற்கை உரம் என்பது - கரிமப் பொருள்
87. தாவரங்களின் வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கத்திற்கும் இன்றியமையாத தனிமங்கள் எத்தனை - 16
88. தாவர மற்றும் விலங்குக் கழிவுகளை விரைவில் சிதைப்பதற்காக மண்புழுக்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் உரம் - மண்புழு தொழுஉரம் அல்லது மண்புழு இயற்கை உரம்
89. பசுந்தாள் உரம் என்பது - சணல் , கொழிஞ்சி கொண்டு தயாரிக்கப்படுவது
90. உயிரி உரங்களின் ஆதாரம் ------------------ ஆகும் - பாக்டீரியா, நீலபசும்பாசி, புஞ்சைகள்
91. நைட்ரஜனின் உரங்களுக்கு எடுத்துக்காட்டு - யூரியா, அம்மோனியம் சல். பேட், அம்மோனியம் நைட்ரேட் போன்றவை.
92. பாஸ்பரஸ் உரங்களுக்கு (கனிச் சத்துக்கள்) எடுத்துக்காட்டுகள் - தனி சூப்பர்பாஸ்பேட், டிரிப்பிள் சூப்பர் பாஸ்பேட்
93. பொட்டாசிய உரங்களுக்கு (சாம்பல் சத்துக்கள்) எடுத்துக்காட்டுகள் - பொட்டாசியம் நைட்ரேட், பொட்டாசியம் குளோரைடு.
94. கலப்பு உரங்களுக்கு எடுத்துக்காட்டு - நைட்ரோ பாஸ்பேட், அம்மோனியம் பாஸ்பேட், டை-அம்மோனியம் பாஸ்பேட்
95. பூச்சிகளைக் கொல்லப் பயன்படும் வேதிப்பொருள்கள் --- எனப்படும் - பூச்சிக்கொல்லிகள்
96. பூச்சிக்கொல்லிகளுக்கு எடுத்துக்காட்டுகள் - D.D.T (டை குளோரோ டை பீனைல் ட்ரை குளோரோ ஈத்தேன்), மாலத்தியான்
97. பூஞ்சைகளை அழிக்க உதவுபவை - போர்டாக்ஸ் கலவை
98 எலிக்கொல்லிகளுக்கு எடுத்துக்காட்டுகள் - துத்தநாக பாஸ்பேட், ஆர்சனிக்
99. தேவையற்ற செடிகளை அழிக்க உதவுபவை - களைக்கொல்லிகள்
100. களைக்கொல்லிகளுக்கு எடுத்துக்காட்டு - 2,4-D (2, 4 - டை குளோரோ பீனாக்ஸி அசிட்டிக் அமிலம்)