30/09/2015 Teachers news - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

30/09/2015 Teachers news

SIVAKASI TEACHER KARUPPASAMY

1-ஓய்வூதியர்களுக்கும் 6% அகவிலைப்படி உயர்வு! மத்திய அரசு அறிவிப்பு
   

2-7th Central Pay Commission – Report to be submitted soon --

3-Employees’ Views on Compulsory retirement after 30 years of service/on reaching 50 years of age…

4-பத்திரிகையாளர்களின் ஓய்வூதியம் 8 ஆயிரம் உயர்வு!(2003 - க்கு பின் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு எதுவும் இல்லை )

5-அரசு உதவி பெறும் பள்ளியில் வேலை வாய்ப்பு!

6-3,000 ஆண்டுகள் பழையான நகரம் மதுரை! இன்று நவீனமயமாக மாணவியர் கருத்து கேட்பு!

7-சி.பி.எஸ்.இ., தனித்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்!

8-பள்ளிகளுக்கு பாடப்புத்தகம் வழங்கல்; சேலம் ஏ.இ.இ.ஓ.,க்களின் கட்டாய வசூல்

9-சீன பொருள்களால் சுற்றுச்சூழலுக்கு கேடு : அதிர்ச்சி தகவல்!

10-TNPSC-DEPARTMENTAL TEST DECEMBER-ON LINE APPLICATION 2009 -

11- "SUPERANNUATION "இல் பணி ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து திருத்தம் மற்றும் தெளிவுரை - கோரிக்கை நிராகரிப்பு! தீர்ப்பு தள்ளிவைப்பு !

12-காவல் நிலையத்தில் பள்ளிக்கூடம்! பிளஸ் 2, 10ம் வகுப்பு தனித்தேர்வு துவக்கம்!

13-போராட்டம் நடத்திய சத்துணவு ஊழியர்கள் 3,000 பேர் கைது !

14- 1,000 கிராமங்களில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடப்படும்'! 31 அரசுக் கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்!

15- பி.எட்., கல்வி கட்டணம் உயர்கிறது!

16-கடுமையான காய்ச்சல் இருந்தால் அது டெங்கு காய்ச்சலாக இருக்கலாம்! பாதுகாப்பாக இருக்க இயக்குநர் அறிவுரை!

17-50 வயதுக்கு மேல் கட்டாய ஓய்வு உள்ள மத்திய அரசு ஊழியர்கள் கலக்கம்!

18-20 ஆயிரம் சமுதாய சுய உதவிக் குழு பயிற்றுநர்களுக்கு ரூ.15 கோடியில் அம்மா கைப்பேசிகள் !

19-நெஞ்சம் நிமிர்ந்து, தேசத்திற்காக சேவை புரிய ஓர் வாய்ப்பு!

ஓய்வூதியர்களுக்கும் 6% அகவிலைப்படி உயர்வு! மத்திய அரசு அறிவிப்பு "The undersigned is directed to refer to this Department's OM No. 42/10/2014- P&PW(G) dated 27th April, 2015 on the subject mentioned above and to state that the President is pleased to decide that the Dearness Relief (DR) payable to Central Government pensioners/family pensioners shall be enhanced from the existing rate of 113% to 119% w.e.f. 1st July, 2015" 7th Central Pay Commission – Report to be submitted soon -- Posted: 29 Sep 2015 06:46 AM PDT Seventh Pay Commission is ready with its recommendations on revising emoluments for nearly 48 lakh central government employees and 55 lakh pensioners, and will soon submit report to the Finance Ministry. Earlier in August, the government had extended Commission’s term by another four months till December 31 to give recommendations. “The Commission is ready with recommendations and the report will be submitted soon,” according to sources. The Commission, whose recommendations may also have a bearing on the salaries of the state government staff, was given more time by the Union Cabinet just a day before its original 18-month term was coming to an end. Headed by Justice A K Mathur, the Commission was appointed in February 2014 and its recommendations are scheduled to take effect from January 1, 2016. The government constitutes the Pay Commission almost every 10 years to revise the pay scale of its employees and often states also implement the panel’s recommendations after some modifications. As part of the exercise, the Commission holds discussions with various stakeholders, including organisations, federations, groups representing civil employees as well as defence services. Meena Agarwal is the secretary of the Commission. Other members are Vivek Rae, a retired IAS officer of 1978 batch and Rathin Roy, an economist. Sixth Pay Commission was implemented with effect from January 1, 2006, the fifth from January 1, 1996 and the fourth from January 1, 1986. Employees’ Views on Compulsory retirement after 30 years of service/on reaching 50 years of age… Posted: 29 Sep 2015 06:43 AM PDT Recently, the Central Government Employee’s Welfare Ministry released an announcement which has created panic and commotion among the central government employees. In the announcement it has been said that senior officials have to analyse the service record and decide whether employees who have completed thirty years of service or reached their 50th year should continue their service or be advised to leave service after three months notice. Does it take a management to learn that an official or an employee is unfit to continue in service when he has reached his 50th year? Does it take thirty years of continuous service to assess the efficiency of an employee? Can’t the ability of an employee be learnt during his probation period? Leaving an employee at such times and trying to force him out of service when he is old appears rather inhumane. When problems like educations expenses of children, marriage and housing loan afflict employees, the announcement of compulsory retirement will certainly be a great shock. Hence, Central Government should provide an explanation about the announcement and help clear the doubts of the central Government Employees. Changes have to be made at the beginning itself. If the Central Government brings changes at a very late period then the purpose for which it released this very announcement would become futile and ineffective. On the contrary, it will only lead to a loss of trust that employees have on the Central Government.    

பத்திரிகையாளர்களின் ஓய்வூதியம் 8 ஆயிரம் உயர்வு!(2003 - க்கு பின் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு எதுவும் இல்லை ) Posted: 29 Sep 2015 06:39 AM PDT இன்று சட்டசபையில் 110-வது விதியின்கீழ் அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- 'கத்தி முனையை விட பேனா முனை வலுவானது' என்று பேரறிஞர் அண்ணா கூறினார். ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்குபவர்கள் பத்திரிகையாளர்கள். காலம் நேரம் பாராமல் உழைக்கின்ற பத்திரிகையாளர்கள், தாங்கள் ஓய்வு பெறும் காலத்தில் மனநிறைவோடும், மனஅமைதியோடும் வாழ்ந்திட வேண்டும் என்பதில் இந்த அரசு தனி அக்கறை கொண்டுள்ளது.அதன் அடிப்படையில் தான் கடந்த 2011-ஆம் ஆண்டில் இவ்வரசு பொறுப்பேற்ற பின்பு பத்திரிகையாளர்களின் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் ஆகியவை இரண்டு முறை உயர்த்தி வழங்கப்பட்டுள்ளன.20 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்று நலிவுற்ற நிலையில் உள்ள பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர ஓய்வூதியம், 14.9.2011 முதல் 5,000 ரூபாயிலிருந்து 6,000 ரூபாயாகவும், 7.10.2013 முதல் 6,000 ரூபாயிலிருந்து 7,500 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. அதே போல் மறைந்த பத்திரிகையாளர்களின் குடும்பத்திற்கு வழங்கப்பட்டு வந்த, குடும்ப மாதாந்திர ஓய்வூதியம் 14.9.2011 முதல் 2,500 ரூபாயிலிருந்து 3,000 ரூபாயாகவும், 7.10.2013 முதல் 3,000 ரூபாயிலிருந்து 4,500 ரூபாயாகவும் உயர்த்தி வழங்க ஆணையிடப்பட்டு, அவ்வாறே வழங்கப்பட்டு வருகிறது. எனினும் இன்றைய வாழ்க்கைச் சூழலைக் கருத்தில் கொண்டு, பத்திரிகையாளர் நலன் கருதி, அவர்களது ஓய்வு காலம் குறித்து ஓர் நம்பிக்கையும், இன்றைய வாழ்வின் மீது ஒரு பிடிப்பும் ஏற்படும் வகையில் இந்த ஓய்வூதியங்களை மேலும் உயர்த்தி வழங்க நான் முடிவெடுத்துள்ளேன்.இதன்படி, பத்திரிகையாளர்களின் ஓய்வூதியம் 7,500 ரூபாயிலிருந்து 8,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். அதைப் போல, மறைந்த பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் குடும்ப ஓய்வூதியம் 4,500 ரூபாயிலிருந்து 4,750 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன்தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு 110-வது விதியின் கீழ் வாசிக்கப்பட்ட அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அரசு உதவி பெறும் பள்ளியில் வேலை வாய்ப்பு! Posted: 29 Sep 2015 06:26 AM PDT Teachers wanted BT-Assistant (English-BC) BT-ASS (MATHS-SC) BSc and BA, BEd.TET 90marks above.In tirunelveli Male and female with Hindus only immediately call me 8015155610

3,000 ஆண்டுகள் பழையான நகரம் மதுரை! இன்று நவீனமயமாக மாணவியர் கருத்து கேட்பு! Posted: 29 Sep 2015 06:01 AM PDT மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து விழிப்புணர்வு மற்றும் கருத்துக் கேட்புக் கூட்டம் நேற்று நடந்தது. மேயர் ராஜன் செல்லப்பா தலைமை வகித்தார். கலெக்டர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்து பேசியதாவது: 3,000 ஆண்டுகள் பழையான நகரம் மதுரை. பல நாடுகளில் இருந்தும் இங்கு மக்கள் வருகின்றனர். அதற்கு ஏற்ப அடிப்படை வசதிகளில் பின்தங்கியுள்ளோம். மத்திய மாநில அரசுகளின் பங்களிப்புகளால் ஐந்தாண்டுகளில் ரூ.1,000 கோடியில் திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இதில் எந்த பணிகளுக்கு முன்னுரிமை கொடுப்பது என ஜனநாயக முறைப்படி பொதுமக்கள் இத்திட்டங்களை தேர்வு செய்யலாம், என்றார். கமிஷனர் கதிரவன் பேசுகையில், முழுமையான கட்டமைப்புகளுக்கு தேவையான திட்டங்களும், தனித்திட்டங்களும் இத்திட்டத்தில் நிறைவேற்றப்படலாம், என்றார். ஆன்லைனின் வாக்களிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஏராளமான கல்லுாரி மாணவியர் பங்கேற்றனர். ஆன்லைன் வாக்களிப்பு குறித்து நகர் பொறியாளர் மதுரம் விளக்கினார். மேடையில் வைக்கப்பட்ட வாக்குப் பெட்டியில் பொதுமக்கள் வாக்குப்பதிவு செய்தனர். துணை கமிஷனர் சாந்தி, நகர் நல அலுலவலர் யசோதா மணி, நகரமைப்பு அலுவலர் ரங்கராஜன், உதவி கமிஷனர்கள் பழனிச்சாமி, நாராயணன், மண்டல தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்.

சி.பி.எஸ்.இ., தனித்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்! Posted: 29 Sep 2015 05:57 AM PDT சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளை, 2016 மார்ச்சில், தனித்தேர்வராக எழுத உள்ளவர்கள், சி.பி.எஸ்.இ., இணைய தளத்தில், தங்களின் விவரங்களை, அக்., 15க்குள் பதிவு செய்ய வேண்டும். தவறான தகவல்கள் தருவோர், உரிய கட்டணம் செலுத்தாதோர் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

பள்ளிகளுக்கு பாடப்புத்தகம் வழங்கல்; சேலம் ஏ.இ.இ.ஓ.,க்களின் கட்டாய வசூல் Posted: 29 Sep 2015 05:55 AM PDT இரண்டாம் பருவ பாடப்புத்தகம், நோட்டு, யூனிபார்ம் உள்ளிட்டவைகளை எடுத்துச்செல்ல வரும், தலைமை ஆசிரியர்களிடம், உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள், கட்டாய வசூலில் இறங்கியுள்ளதால், கடும் அதிருப்தி நிலவுகிறது. சேலம் மாவட்டத்தில், 1, 111 அரசு மற்றும் நிதியுதவி பெறும் துவக்கப்பள்ளிகளும், 378 நடுநிலைப்பள்ளிகளும் உள்ளன. இவற்றில், படிக்கும் மாணவ, மாணவியருக்கு, முதல்பருவ தேர்வு முடிந்து, விடுமுறை விடப்பட்டுள்ளது. இரண்டாம் பருவ வகுப்பு, அக்., 5ம் தேதி துவங்குகின்றன. பள்ளி திறக்கும் நாளன்று, விலையில்லா பாடப்புத்தகம், நோட்டு, யூனிபார்ம், கிரையான்ஸ் ஆகியவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பள்ளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, அந்தந்த உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களுக்கு, அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த பொருட்களை, பள்ளி தலைமை ஆசிரியர்கள், செப்., 29ம் தேதியன்று வந்து சேகரித்து செல்ல உத்தரவிட்டுள்ளது. பொருட்களை எடுக்க வரும் தலைமை ஆசிரியர்கள், 100 ரூபாய் முதல், 200 ரூபாய் வரை, உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்தில் கொடுத்து செல்ல வேண்டும் என, கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து பெயர் கூற விரும்பாத ஆசிரியர் கூறியதாவது: சேலம் ஜங்சனில் இருந்து, உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்துக்கு, புத்தகம் உள்ளிட்ட பொருட்களை எடுத்து வந்த போக்குவரத்து செலவுகளை ஈடுசெய்ய, தலைமை ஆசிரியர்களிடம் வசூல் வேட்டை நடத்தப்படுகிறது. உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களாவது, சில்லறை செலவினங்கள் என்ற தலைப்பில், இந்த செலவுகளுக்கு பணத்தை பயன்படுத்த முடியும். ஆனால், துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், தங்கள் சொந்த பணத்தை பயன்படுத்தியே, புத்தகம் உள்ளிட்டவைகளை எடுத்து வர வேண்டியுள்ளது. அந்த செலவுகளுக்கே என்ன செய்வதென தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கும் போது, இதில், உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்தின், வசூல் வேட்டை, மேலும் அவதிக்குள்ளாக்குள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து சேலம் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் தங்கராஜ் கூறுகையில், ஆசிரியர்களிடம் கட்டாய வசூல் வேட்டை நடத்துவது தவறு. உடனடியாக உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களை எச்சரிக்கை செய்கிறேன், என்றார்.

சீன பொருள்களால் சுற்றுச்சூழலுக்கு கேடு : அதிர்ச்சி தகவல்! Posted: 29 Sep 2015 05:50 AM PDT சீன பொருட்களின் விலை குறைவாக இருக்கும் நிலையில், அதன் பாதிப்பு மற்றும் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள், சீன பொருட்களினால் ஏற்படும் பாதிப்பு குறித்த ஆய்வினை மேற்கொண்டிருந்தனர். அதன் முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளனர். விலை குறைவு மற்றும் எளிதாக அனைத்திடத்திலும் கிடைப்பதன் காரணமாக சர்வதேச அளவில், கடந்த 15 ஆண்டுகளில் சீன பொருட்களின் பயன்பாடு பெருமளவு அதிகரித்துள்ளது. விலை குறைவு காரணமாக, சீன பொருட்களை அதிகளவில் விரும்பி உபயோகிக்கப்படுகிறது இந்த பொருட்களின் உற்பத்தி காலத்தில், அதிகளவில் கரியமில வாயு (கார்பன் டை ஆக்சைடு) வெளியிடப்படுகிறது. இதன் காரணமாக, சீனா மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் சுற்றுப்புற சூழ்நிலை கடுமையாக பாதிக்கப்படுவதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் காற்று மாசுபாடு என்று அங்கிருந்து அடிக்கடி வரும் செய்திகளுக்கு, சீன பொருட்களின் உற்பத்தி ஆலைகளே முக்கிய காரணம் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC-DEPARTMENTAL TEST DECEMBER-ON LINE APPLICATION Posted: 29 Sep 2015 05:45 AM PDT 2015...ONLINE APPLICATION LAST DATE - 30.09.2015. click here to Registration

2009 - "SUPERANNUATION "இல் பணி ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து திருத்தம் மற்றும் தெளிவுரை - Posted: 28 Sep 2015 11:12 PM PDT கோரிக்கை நிராகரிப்பு! Posted: 28 Sep 2015 11:10 PM PDT தீர்ப்பு தள்ளிவைப்பு ! Posted: 28 Sep 2015 10:34 PM PDT தமிழகம் முழுவதும் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணியவேண்டும் என்று ஐகோர்ட்டு பிறப்பித்தஉத்தரவின்படி, தமிழக அரசு கடந்த ஜூன் மாதம் அரசாணை பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து, இந்த ஹெல்மெட் அணியவேண்டும் என்பது தொடர்பான வழக்கு ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் முன்புநிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், கட்டாய ஹெல்மெட் அணியவேண்டும் என்று உத்தரவிட ஐகோர்ட்டுக்கு அதிகாரம்இல்லை என்று கூறி வக்கீல் முத்துகிருஷ்ணன் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-ஹெல்மெட் அணிவது தொடர்பான உத்தரவு பிறப்பிக்க மாநில அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளது. அந்த மாநில அரசின் அதிகாரத்தில்,தலையிடும் விதமாக ஐகோர்ட்டு உத்தரவிடமுடியாது. தமிழகத்தில் கட்டாய ஹெல்மெட் உத்தரவை, 1975-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட அவசர நிலை பிரகடனம்போல், அமல்படுத்தப்பட்டுவருகிறது. மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணியவேண்டும் என்று உள்துறை செயலாளர், டி.ஜி.பி.ஆகியோர் உத்தரவிட வேண்டும் என்று இந்த ஐகோர்ட்டு உத்தரவிட அதிகாரம் இல்லை. மோட்டார் சைக்கிளில் செல்லும் பெண்கள்,குழந்தைகள் ஹெல்மெட் அணிய மிகவும் சிரமப்படுகிறார்கள். 2 கிலோ எடை கொண்டஹெல்மெட்டை எப்படி குழந்தைகளால்தாங்கிக்கொள்ள முடியும்?ஹெல்மெட் எப்படி இருக்கவேண்டும்? என்ற வடிவத்தை மத்திய அரசு இன்னும் இறுதி செய்யாமல் இருக்கும்பட்சத்தில், கட்டாயஹெல்மெட் உத்தரவை எப்படி அமல்படுத்த முடியும்? இந்த உத்தரவு அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. கட்டாய ஹெல்மெட்உத்தரவினால், தமிழகத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டும் ஒன்றரை கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த ஐகோர்ட்டின்உத்தரவை மறுஆய்வு செய்யவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.இந்த மனு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் ஆஜராகி வாதிட்டார். அப்போது நீதிபதி, ‘வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் போடவேண்டும் என்று தான் சட்டம் சொல்கிறது. வண்டியை ஓட்டுபவர்கள்மட்டுமல்ல, பின்னாள் உட்கார்ந்திருப்பவர்களும் ஹெல்மெட் அணியவேண்டும். விபத்து ஏற்படும்போது ஆண், பெண் என்று எந்தவித்தியாசமும் இல்லாமல் பாதிப்பு ஏற்படுகிறது. விபத்தில் மக்கள் பலியாவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க சொல்கிறீர்களா?’என்று கருத்து தெரிவித்தார்.பின்னர், மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளிவைத்தார்.

காவல் நிலையத்தில் பள்ளிக்கூடம்! Posted: 28 Sep 2015 10:12 PM PDT மக்கள், பாதுகாப்பிற்காக நாடும் காவல் நிலையம், ஆதரவற்ற சிறுவர்கள் பலருக்கு, பாடம் போதிக்கும் பள்ளிக்கூடமாகவும் திகழ்கிறது. டில்லி ரயில் நிலையத்தில் தான், இந்த அதிசய காவல் நிலையம் உள்ளது. டில்லி ரயில் நிலையத்திற்கு, ஒரு நாளைக்கு, 289 ரயில்கள் வந்து செல்கின்றன; இவற்றில் வந்திறங்கும் ஆதரவற்ற சிறுவர், சிறுமியருக்கு ஆதரவு கரம் நீட்டும் பணியில், சலாம் பாலக் டிரஸ்ட் எஸ்.பி.டி., என்ற தொண்டுநிறுவனம் ஈடுபட்டு உள்ளது. வீட்டை விட்டு ஓடிவந்தோர், வழி தவறியோர் என, போலீஸ் துணையுடன் கண்டுபிடிக்கப்படும் சிறார்களுக்கு, ரயில் நிலையத்தில் உள்ள, காவல் நிலையம் தான் முதல் புகலிடம். எஸ்.பி.டி., உறுப்பினர்கள், ரயில்வே போலீசில், சிறார்களின் விவரங்களை பதிவு செய்து, அவர்களை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்புகின்றனர். அதன்பின், சிறார் நல்வாழ்வு கமிட்டிக்கு தெரிவித்து, பெற்றோரிடம் சேர்க்க முயல்கின்றனர். ஆனால், வீடு திரும்ப மறுக்கும் சிறார்களை என்ன செய்வது? அப்படிப்பட்ட சிறுவர்களுக்காக, காவல் நிலையத்திலேயே, குட்டி வகுப்பறையை, செட் அப் செய்து விட்டனர். அங்கு, கதைப் புத்தகங்கள், பொம்மைகள், விளையாட்டுப் பொருட்கள் என, குழந்தைகளுக்கான அனைத்து சமாச்சாரங்களும் உள்ளன. அத்துடன், குழந்தைகளுக்கு, தினமும் ஆசிரியர் மூலம் பாடமும் கற்றுத் தரப்படுகிறது. ஆதரவற்ற சிறார்கள் மட்டுமின்றி, டில்லியின் சுற்றுப்பகுதியில் உள்ள, அனாதை சிறார்களும், காவல் நிலையத்திற்கு வந்து பாடம் கற்கின்றனர். இந்த வகையில், 25 சிறுவர், சிறுமியருடன், மினி பள்ளிக்கூடத்துடன், காவல் நிலையம் இயங்குகிறது. அப்படி வந்த, பல ஆதரவற்ற சிறுவர்களை நாங்கள் தத்தெடுத்து, கல்வி போதித்ததில், பலர், இன்று பொறியாளர்களாகவும், ஆடை வடிவமைப் பாளர்களாகவும், புகைப்பட கலைஞர்களாகவும் உள்ளனர், என, பெருமையுடன் கூறுகிறார், எஸ்.பி.டி., செயல் இயக்குனர் பார்வதி பத்னி. காவல் நிலையம் என்றாலே, அஞ்சும் சமூகத்தில், டில்லி ரயில்வே காவல் நிலையம், பலர் கண்ணியமாக வாழ, அடித்தளம் அமைத்துக் கொடுத்திருப்பதும்; கொடுத்து வருவதும் பாராட்டுக் குரியது

பிளஸ் 2, 10ம் வகுப்பு தனித்தேர்வு துவக்கம்! Posted: 28 Sep 2015 10:09 PM PDT பள்ளிகளில் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் பள்ளி களில் படிக்காமல் தனியாகப் படித்து தேர்வு எழுதுவோருக்கு, செப்., அக்., மாதங்களில், அரசு தேர்வுத் துறையானது, தனித்தேர்வை நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான தனித்தேர்வு இன்று துவங்கி, வரும், 6ம் தேதி முடிகிறது. தமிழகம் முழுவதும், 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வுக்கு விண்ணப்பித்துஉள்ளனர்.


போராட்டம் நடத்திய சத்துணவு ஊழியர்கள் 3,000 பேர் கைது ! Posted: 28 Sep 2015 10:06 PM PDT பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் திங்கள்கிழமை போராட்டம் நடத்திய சத்துணவு ஊழியர்கள் 3,000 பேர் கைது செய்யப்பட்டனர்.சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியர்களாக அறிவித்து ஊதிய குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஊதியம் வழங்குதல், ஓய்வூதியம் உயர்த்துதல், பணி நிரந்தரம், பதவி உயர்வு என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி, சத்துணவு ஊழியர்கள் தொடர்சியாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், சத்துணவு ஊழியர்கள் எழும்பூர் ராஜரத்தினம் அரங்கத்தில் இருந்துதலைமைச் செயலகத்தை நோக்கி திங்கள்கிழமை ஊர்வலமாகப் புறப்பட்டனர். இவர்களை எழும்பூர் லாங்க்ஸ் கார்டன் சாலை அருகே போலீஸார் தடுத்து நிறுத்தினர்.பின்னர்சங்கப் பிரதிநிதிகள் அரசு பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தச் சென்றனர். ஆனால், பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படாததால் அவர்கள் தலைமைச் செயலக வளாகத்தில்போராட்டம் நடத்தினர். இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.இதையறிந்த ஊழியர்கள் எழும்பூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அவர்கள் தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முற்பட்டனர். இவர்களை போலீஸார் தடுத்ததால், அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் லேசான தடியடியும் நடத்தினர்.இதையடுத்து, சுமார் 3000 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் சமூக நலக் கூடங்களிலும், திருமண மண்டபங்களிலும் தங்க வைக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

1,000 கிராமங்களில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடப்படும்'! Posted: 28 Sep 2015 10:04 PM PDT நடப்பு ஆண்டில் 1,000 கிராமங்களில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடப்படும் என்று வனத் துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் திங்கள்கிழமை வனத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து, அவர் வெளியிட்ட அறிவிப்புகள்: தமிழ்நாடு உயிர்பன்மை பாதுகாப்பு, பசுமையாக்கல் திட்டத்தின் 2015-16-ஆம் ஆண்டில் 1,000 கிராமங்களில் 1.02 கோடி மரக்கன்றுகள் நடப்படும் பணி ரூ.115.31 கோடி மதிப்பீட்டில் செய்யப்படும். இதில், ரூ.28.31 கோடி பணியாளர் ஊதியமாகும்.

31 அரசுக் கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்! Posted: 28 Sep 2015 10:01 PM PDT தமிழகத்தில் 31 அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள முதல்வர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வலியுறுத்தி, அரசுக் கல்லூரி ஆசிரியர் மன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதுகுறித்து மன்றத்தின் பொதுச் செயலாளர் ப.சிவராமன் கூறியது: அரசுக் கல்லூரி ஆசிரியர் மன்றத்தின் செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், 31 அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள முதல்வர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். கடந்த 5 மாதங்களாக ஊதியமின்றி பணிபுரிந்து வரும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். கல்லூரிக் கல்வி இயக்குநர் பணியிடம் கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்படுவதைத் தவிர்த்து நிரந்தர இயக்குநரை நியமிக்க வேண்டும். மண்டல இணை இயக்குநர் பதவிக்கு பணி மூப்பு அடிப்படையில் மட்டுமே நியமனம் செய்யவேண்டும். கல்லூரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என்பன உள்பட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தத் தீர்மானங்களை அரசு நிறைவேற்றத் தவறினால், நடைபெற உள்ள நவம்பர் மாத பல்கலைக்கழக பருவத் தேர்வுப் பணிகளைப் புறக்கணிப்பது உள்ளிட்ட போராட்டங்கள் மூலம் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் ஈடுபடுவர் என்றார் அவர்.

பி.எட்., கல்வி கட்டணம் உயர்கிறது! Posted: 28 Sep 2015 09:33 PM PDT தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் தமிழகத்தில் உள்ள 7 அரசு பிஎட் கல்லூரிகள் மற்றும் 14 அரசு உதவி பெறும் பிஎட் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் உள்ள 1,777 இடங்களுக்கு 8,005 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவர்களுக்கான கலந்தாய்வை உயர்கல்வி துறை அமைச்சர் பழனியப்பன், லேடி வெலிங்டன் கல்லூரியில் பேசியதாவது: பிஎட் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடங்கி 5ம் தேதி வரை நடைபெறுகிறது. 2011ம் ஆண்டு 18 சதவீதமாக உயர்கல்வி மாணவர் சேர்க்கை வீதம் தற்போது 48 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்காக காரப்பாக்கத்தில் ரூ.38 கோடியில் புதிய கட்டிடம் கட்ட விரைவில் அடிக்கல் நாட்டப்படும். அரசு பிஎட் கல்லூரிகளில் தற்போது கல்வி கட்டணம் ரூ.2 ஆயிரமாகவும், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் ரூ.10 ஆயிரமாகவும், சுயநிதி கல்லூரிகளில் 41 ஆயிரத்து 500கவும் உள்ளது. 2 ஆண்டுகளுக்கான கல்விகட்டணம் நிர்ணயம் செய்ய உயர்கல்வி கட்டண நிர்ணய குழுவான பாலசுப்பிரமணியன் கமிட்டியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் விரைவில் புதிய கட்டணம் குறித்து அறிவிப்பு வெளியிடுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

கடுமையான காய்ச்சல் இருந்தால் அது டெங்கு காய்ச்சலாக இருக்கலாம்! பாதுகாப்பாக இருக்க இயக்குநர் அறிவுரை! Posted: 28 Sep 2015 09:30 PM PDT மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோரிடம் கடுமையான காய்ச்சல் இருந்தால் அது டெங்கு காய்ச்சலாக இருக்கலாம் எனவே உடனே அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என்று அனைத்து பள்ளிக் கூட தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் கடிதம் அனுப்பி உள்ளது. பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அதிகாரிகள் வழியாக கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:– கொசு உற்பத்தியை தடுக்க பள்ளிக் குழந்தைகள் கீழ்க்காணும் சுகாதாரமான பழக்கங்களைக் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். * ஆசிரியர்கள், மாணவ–மாணவிகள் அவ்வப்போது கைகளைச் சுத்தப்படுத்திக் கொள்ளுதல் குறிப்பாக உணவு உண்பதற்கு முன்பும் கைகளைக் கழுவுதல். *உணவு உண்ணும் தட்டுகள் மற்றும் தண்ணீர் குடிக்கும் டம்ளர் மற்றும் உணவு சமைக்கும் பாத்திரங்கள் அனைத்தும் சுத்தமாகவும் தூய்மையாகவும் இருத்தல் வேண்டும். * குடிநீர்ப் பானைகள் மற்றும் தண்ணீர் தொட்டிகள் மூடி வைக்கப்பட வேண்டும். இதன் மூலம் கொசுக்களின் பெருக்கத்தைத் தடுக்க முடியும். *வகுப்பறைகளைச் சுத்தமாகவும் ஒழுங்காகவும் வைத்திருத்தல் வகுப்பறை மற்றும் கழிவறைகளைச் சுற்றித் தண்ணீர் தேங்கி இருந்தால் உடனடியாக அதனைத் தலைமையாசிரியருக்கு மாணவர்கள் தெரியப்படுத்துதல். *தலைமையாசிரியர் தேங்கிய நீரை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பன்றிக் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பற்றிய அறிகுறிகள் பற்றிய விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்துதல். அதனை மாணவர்கள் தங்களுடைய பெற்றோர்களுக்கும் தெரிவித்து இது குறித்த விழிப்புணர்வை தங்கள் குடும்பத்தாருக்கும் ஏற்படுத்த வேண்டும். ஆஸ்பத்திரிக்கு செல்ல அறிவுரை *ஆசிரியர்கள், மாணவ–மாணவிகளிடம் கடுமையான காய்ச்சல், சளி, இருமல் முதலிய அறிகுறிகள் காணப்பட்டால் அதனை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் உடனடியாகத் தெரியப்படுத்த வேண்டும். அவர்களை உடனடியாக அரசு மருத்துவமனைக்குச் செல்ல அறிவுறுத்தவது கட்டாயம். மாணவ–மாணவர்களுக்கு உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளுமாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். *எந்த சூழ்நிலையிலும் சுயமருத்துவம் செய்து கொள்வதை தவிர்த்தல் வேண்டும். *மாணவர்கள் தங்கள் வீட்டில் உள்ளோரிடம் கடுமையான காய்ச்சல், சளி, இருமல் முதலிய அறிகுறிகள் காணப்பட்டால் அதனை தலைமையாசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியரிடம் தெரிவிக்குமாறு அறிவுறுத்துதல். காலை நேர வழிபாட்டு நேரத்தில் *காலை வழிபாடு நேரத்தில் வாரத்தில் மூன்று நாட்கள் அனைத்து மாணவர்களும் இது குறித்து சுய உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். *மேலும் கல்வித்துறையை சார்ந்த அனைத்து அலுவலகங்களிலும், அலுவலக வளாகங்களையும் சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்துக் கொள்ளவும் அதற்குரிய சான்றினை சார்ந்த அலுவலர்கள் வழங்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

50 வயதுக்கு மேல் கட்டாய ஓய்வு உள்ள மத்திய அரசு ஊழியர்கள் கலக்கம்! Posted: 28 Sep 2015 09:24 PM PDT மத்திய அரசில் 18 பெரிய துறைகள் உள்ளன. ராணுவம், பாதுகாப்பு, வெளியுறவு, மனித வள மேம்பாடு, எல்.ஐ.சி., தபால், பி.எஸ்.என்.எல்., கப்பல், வருமான வரி, சுங்கவரி உள்ள பல துறைகளில் ரெயில்வே மிகப் பெரிய துறையாகும். இந்த துறையில் மட்டும் 13 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.அனைத்து மத்திய அரசு துறைகளிலும் மொத்தம் 34 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். 38 லட்சம் ஓய்வூதியதாரர்களும் உள்ளனர். மத்திய அரசின் புதியகொள்கைக்கு எதிராக நவம்பர் 23–ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஊழியர்கள் ஈடுபடப் போவதாக அறிவிப்பு கொடுத்துள்ளனர்.அந்நிய நேரடி முதலீடு, தனியார் மயம், ஆட் குறைப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகளை கண்டித்து நாடு முழுவதும் வேலை நிறுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் மத்திய அரசு ஏற்கனவே உள்ள சட்டத்தை புதிதாக நடைமுறைப்படுத்த உத்தரவிட்டுள்ளது. 56(ஜெ), 56 (ஐ) ஆகிய விதியின் கீழ் 50 முதல் 55 வயதுடைய அல்லது 30 வருடம் சர்வீஸ் முடித்தவர்களை 3 மாதத்திற்கு ஒருமுறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். இதற்காக 2 பேர் கொண்ட ஆய்வு கமிட்டியை அமைத்து செயல்படுத்தவும் அனைத்து துறை அதிகாரிகளும் இதனை உடனே பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.இதற்கான உத்தரவு கடந்த 4–ந்தேதி பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த புதிய உத்தரவால் அனைத்து ஊழியர்களும் அதிர்ச்சியும் கலக்கமும் அடைந்துள்ளனர்.இதனால் ‘ஏ’ முதல் டி பிரிவுவரை உள்ள அதிகாரிகளும் ஊழியர்களும் பழி வாங்கப்படலாம் என்று கருதுகின்றனர்.நவம்பர் மாதம் நடைபெற உள்ள காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தடுக்கவும் ஒடுக்குவதற்காகத்தான் புதிய சட்டத்தை தற்போது மத்திய அரசு அமல்படுத்துகிறது. இதன் மூலம் ஊழியர்களை கட்டாய ஓய்வு கொடுத்து வீட்டிற்கு அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக மத்திய தொழிற்சங்கங்கள், ரெயில்வே தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன. இதுகுறித்து எஸ்.ஆர்.இ.எஸ். தொழிற்சங்க பொதுச் செயலாளர் பி.எஸ்.சூரிய பிரகாசம் கூறியதாவது:–இந்த புதிய சட்டத்தால் ரெயில்வே துறையில் உள்ள அனுபவமிக்க தொழிலாளர்கள், அதிகாரிகள் பாதிக்கப்படுவார்கள். சம்பள உயர்வு கட், பதவியிறக்கம் போன்று ஏற்கனவே பாதிப்புக்கு உள்ளான தொழிலாளர்களையும், அதிகாரிகளையும் நேர்மையற்ற திறமையற்றவர்களாக கருதி கட்டாய ஓய்வு கொடுக்க முடிவு செய்துள்ளது. இந்த சட்டத்தைபயன்படுத்தி வேலை செய்ய தகுதி இல்லாதவர்கள் எனக் கூறி 50 வயதுக்கு மேல் உள்ளவர்களை வெளியேற்ற மோடி அரசு சதி செய்கிறது. சரியாக வேலை செய்யவில்லை என்று காரணம் காட்டி வீட்டிற்கு அனுப்புவதற்கு வழி வகுக்கிறது. காலவரையற்ற வேலை நிறுத்தத்தை நசுக்கத்தான் இந்த உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.இதனை உடனேவாபஸ் வாங்க வேண்டும். வாபஸ் வாங்கும் வரை போராட்டம் தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.

20 ஆயிரம் சமுதாய சுய உதவிக் குழு பயிற்றுநர்களுக்கு ரூ.15 கோடியில் அம்மா கைப்பேசிகள் ! Posted: 28 Sep 2015 09:18 PM PDT மகளிர் சுய உதவிக் குழுக்கள் தமிழகத்தில் மாபெரும் சக்தியாக உருவெடுத்து, இப்போது 6.08 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்கள், 92 லட்சம் உறுப்பினர்களைக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. இந்த சுய உதவிக் குழுக்களை மேற்பார்வையிட சமுதாய சுய உதவிக் குழு பயிற்றுநர்கள் உள்ளனர். அவர்கள் புதிய சுய உதவிக் குழுக்களை அமைக்கவும், பயிற்றுவிக்கவும் துணை புரிந்து வருகின்றனர். சுய உதவிக் குழுக்கள் நடத்தும் கூட்டங்கள், சந்தா தொகை செலுத்துதல், சேமிப்பு போன்ற பல்வேறு நடைமுறைகளுக்குப் பதிவேடுகளைப் பராமரிக்க வேண்டியுள்ளது. விவரங்களைப் பதிவேடுகளில் பதிவு செய்யவும் அவர்களின் செயல்பாடுகளை மேற்பார்வையிடவும், தமிழ் மொழியில் சிறப்பு மென்பொருள் உருவாக்கி கணினிமயமாக்கப்பட்ட கைப்பேசிகள் வழங்கப்படும். இந்தப் புதிய திட்டம், "அம்மா கைப்பேசி திட்டம்' என்ற பெயரில் செயல்படுத்தப்படும். முதல் கட்டமாக, 20 ஆயிரம் சமுதாய சுய உதவிக் குழு பயிற்றுநர்களுக்கு ரூ.15 கோடியில் அம்மா கைப்பேசிகள் வழங்கப்படும். ரூ.195 கோடியில் 4 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள்: கடலூர், நாகப்பட்டினம், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ.195.94 கோடியில் நான்கு கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

நெஞ்சம் நிமிர்ந்து, தேசத்திற்காக சேவை புரிய ஓர் வாய்ப்பு! Posted: 28 Sep 2015 08:58 PM PDT அத்தகைய அர்ப்பணிப்பு உணர்வுடன் நாட்டின் பாதுகாப்பிற்காக சேவை புரிய, இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு இதோ: பணியிடங்கள்: இந்திய கடற்படையில் பைலட் (ஆண்கள் மட்டும்) மற்றும் அப்சர்வர் (இரு பாலரும்) வயது வரம்பு: பொது விண்ணப்பதாரர்கள் 19 வயது முதல் 24 வயதுக்குள் இருத்தல் வேண்டும். கமர்ஷியல் பைலட் லைசென்ஸ் வைத்திருக்கும் விண்ணப்பதாரர்கள் 19 வயது முதல் 25 வயதுக்குள் இருத்தல் வேண்டும். யார் விண்ணப்பிக்கலாம்?: திருமணமாகாத ஆண் மற்றும் பெண் இன்ஜினியரிங் பட்டதாரிகள். முழு உடற்தகுதியுடன், கண் பார்வை குறைபாடின்றி இருத்தல் மிகவும் அவசியம். கல்வித் தகுதி: வரும் ஜூன் 2016 ஆம் ஆண்டு தொடங்க உள்ள பைலட் / அப்சர்வர் பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்க, மேல்நிலை வகுப்புகளில் இயற்பியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களை முதன்மை பாடமாக பயின்று பி.இ., / பி.டெக்., படிப்புகளில் குறைந்தது 60 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தால் பைலட் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். அப்சர்வர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இன்ஜினியரிங் பட்டப் படிப்பில் 55 சதவீதம் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். தேர்வு முறை: இரண்டு கட்டமாக நடைபெறும் தேர்வில், இளநிலை பட்டப்படிப்பில் எடுத்த மதிப்பெண்கள் மற்றும் செயல்திறன் தகுதிகள் அடிப்படையில், சர்வீஸ் செலக்சன் வாரியம் மூலம் தேர்வு செய்யப்படுவர். ஒரு நாள் நடைபெறும் முதலாம் தேர்வு நிலையில், நுண்ணறிவு சோதனை, படம் புலனுணர்வுத் திறன், மற்றும் குழு விவாதம் போன்றவைகள் மதிப்பிடப்படும். நான்கு நாட்கள் நடைபெறும் இரண்டாம் தேர்வு நிலையில், உளவியல் சோதனை, குழு பணி தேர்வு (குரூப் டாஸ்க் டெஸ்ட்) மற்றும் நேர்காணல் தேர்வு ஆகியவை மதிப்பிடப்படும். தொடர்ச்சியாக, பைலட் ஆப்டிடியூட் பேட்டரி டெஸ்ட் மற்றும் ஏவியேஷன் மருத்துவ தேர்வும் நடத்தப்படும். பைலட் மற்றும் அப்சர்வர் பணியிடங்களுக்குத் தகுதியானவர்கள் எழிமலாவில் (கேரளா) உள்ள நேவல் அகடெமியில் 22 வாரங்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவர். அதன்பின் சப்-லெப்டினென்ட் பதவியில் தேவைப்படும் இடங்களில் பணி அமர்த்தப்படுவர்; ஆண்டுக்கு ரூ.10.50 லட்சம் ஊதியமாக வழங்கப்படும். விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் அனுப்பிய விண்ணப்பங்களை ‘பிரின்ட்’ எடுத்து உரிய ஆவணங்களுடன் தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 2 மேலும் விவரங்களுக்கு: www.joinindiannavy.gov.in

நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here