பட்டதாரிகளுக்கு உதவித்தொகை - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

பட்டதாரிகளுக்கு உதவித்தொகை

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: சென்னை ஆட்சியர் அறிவிப்பு சென்னை மாவட்ட ஆட்சியர் ஏ.சுந்தரவல்லி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேலைவாய்ப்பற்ற இளைஞர் களுக்கு தமிழக அரசு, வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலமாக உதவித்தொகை வழங்கி வருகிறது. எஸ்எஸ்எல்சி, பிளஸ்-2, பட்டப் படிப்பு உள்ளிட்ட கல்வித் தகுதி களை வேலைவாய்ப்பு அலுவல கத்தில் பதிவுசெய்து 5 ஆண்டு களுக்கு மேல் வேலைவாய்ப்பு இல்லாமல் காத்திருப்பவர்கள் உதவித்தொகை பெறுவதற்கு சென்னை சாந்தோமில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல கத்தை அணுக வேண்டும். எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெறாதவர்கள் நந்தனத்தில் உள்ள தொழில் திறனற்றோருக்கான மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல கத்தை தொடர்புகொள்ள வேண்டும். விண்ணப்பதாரர்கள் 5 ஆண்டுகளுக்கு மேல் பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்து வருபவராகவும், 40 வயதுக்கு உட்பட்டவராகவும் (எஸ்சி, எஸ்டி வகுப்பினர் எனில் 45 வயது), தனியார் அல்லது சுயவேலை வாய்ப்பில் ஈடுபடாமல் இருப்ப வராகவும், குடும்ப ஆண்டு வரு மானம் ரூ.50 ஆயிரத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளைப் பொருத்தவரையில், பதிவுசெய்து ஓராண்டு ஆகியிருந்தால் போது மானது. அவர்கள் கிண்டி மகளிர் ஐடிஐ வளாகத்தில் அமைந்துள்ள மாற்றுத் திறனாளி களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அவர்களுக்கு கல்வித்தகுதி மற்றும் குடும்ப ஆண்டு வருமானம் உச்சவரம்பு ஏதுமில்லை. ஏற்கெனவே உதவித்தொகை பெற்றுவரும் பயனாளிகளில் விண்ணப்பித்து ஓராண்டு முடிவுபெற்றவர்கள் சுய உறுதி மொழி ஆவணத்தை வேலை வாய்ப்பு அலுவலக பதிவு எண், உதவித்தொகை எண் (எம்ஆர் நம்பர்) ஆகிய விவரங்களுடன் நவம்பர் 30-ம் தேதிக்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here