நவ.16- இரண்டாம் பருவத்தேர்வு துவக்கம் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

நவ.16- இரண்டாம் பருவத்தேர்வு துவக்கம்

நவ.16 - இரண்டாம் பருவ இடைத்தேர்வு துவக்கம் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, நவ., 16ம் தேதி முதல், இரண்டாம் பருவ இடைத்தேர்வு நடத்த, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில், ஒன்பதாம் வகுப்பு வரை முப்பருவ தேர்வு மற்றும் கற்பித்தல் முறை அமலாகிறது. 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை ஆண்டு தேர்வு நடத்தப்படுகிறது. காலாண்டுத் தேர்வு முடிந்து, பள்ளிகளில் இரண்டாம் பருவ பாடங்கள் நடத்தப்படுகின்றன. எனவே, தீபாவளி விடுமுறைக்கு பின், இரண்டாம் பருவ இடைத்தேர்வை நடத்த, அனைத்து அரசு, அரசு உதவி மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது. நவ., 16ம் தேதி தேர்வுகளை துவங்கி, 20ம் தேதிக்குள் முடிக்கவும், அதன்பின், அரையாண்டுத் தேர்வுக்கான பாடப்பகுதிகளை முடிக்கவும், முதன்மைக் கல்வி அதிகாரிகள் மூலம், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். 'இந்தத் தேர்வுக்கு மாவட்ட அளவில், மாவட்ட தேர்வுக்குழு மூலம், ஒரே வகையான வினாத்தாள்கள் வழங்கப்படும்' என, கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here