ஆசிரியர் ஊதிய முரண்பாடு நவம்பர் 31 காலக்கெடு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ஆசிரியர் ஊதிய முரண்பாடு நவம்பர் 31 காலக்கெடு

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின்ஊதிய முரண்பாடுகள்: விபரங்களை நவ.,31 க்குள் அனுப்பி வைக்க அரசு உத்தரவு அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான 7 வது ஊதிய மாற்றத்தை 2006 ஜன., 1 முதல் தமிழக அரசு செயல்படுத்தியது. இதில் முரண்பாடு இருப்பதாகவும், அவற்றை களைய வலியுறுத்தியும், அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் போராடி வருகின்றன. மேலும் பல்வேறு சங்கங்கள் மற்றும் தனிநபர்கள் சார்பிலும் நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளன.ஊதிய முரண்பாடுகளை ஆராய அரசு நிதிச்செயலர் அனைத்து துறை செயலர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் 7 வது ஊதிய மாற்றத்திற்கு முன் மற்றும் பின் ஒவ்வொரு பதவிகளின் ஊதியகட்டு விபரம், துறை வாரியாக ஊழியர்களின் எண்ணிக்கை, அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள், காலியிடங்கள், அதிகாரத்திற்கு உட்பட்ட பதவி, பணியாளர்களின் கல்வித்தகுதி, பணி தன்மை உள்ளிட்ட விபரங்களை நவ.,31 க்குள் அனுப்பி வைக்க வேண்டுமென, தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here