அரசு ஐடிஐ களில் 350 இளநிலை பயிற்சி அதிகாரி பணியிடம் :நேரடி நியமனம் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

அரசு ஐடிஐ களில் 350 இளநிலை பயிற்சி அதிகாரி பணியிடம் :நேரடி நியமனம்

அரசு ஐடிஐ-களில் 350 இளநிலை பயிற்சி அதிகாரி பணியிடம்: நேரடி நியமன நெறிமுறைகள் வெளியீடு தமிழகத்தில் உள்ள ஐடிஐ-களில் இளநிலை பயிற்சி அதிகாரிகளை நேரடியாக நியமிக்க தகுதி மற்றும் தேர்வு நெறிமுறைகளை தமிழக அரசு வகுத்துள்ளது. தமிழகத்தில் உள்ள ஐடிஐகளின் பயிற்சியாளர் பிரிவில் 350க்கும் மேற்பட்ட இளநிலை பயிற்சி அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களை நிரப்புவதற் கான புதிய வழிமுறைகளை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வகுத்து அரசாணை பிறப்பித்துள்ளது. இதன்படி வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இருந்து தகுதியானவர்கள் பட்டியல் இன சுழற்சி அடிப்படையில் பெறப்பட வேண்டும். நேரடி நியமனம் குறித்த விளம்பரம் வெளியிட்டு அதன் மூலமும் விண்ணப்பங்கள் பெற வேண்டும். தேர்வுக்கு ரூ.100-ம், விண்ணப்பம் மற்றும் நடைமுறை கட்டணமாக ரூ.50-ம் வசூலிக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, எஸ்சி அருந்ததியர், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு கல்வி கட்டணம் இல்லை. விண்ணப்பங்களை பரிசீலித்து மாநில அளவில் தேர்வு நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்ய வேண்டும். அதன்பின் செயல்திறன் மற்றும் கற்பித்தல் திறன் குறித்த தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மூலம் இளநிலை பயிற்சி அதிகாரியை தேர்வு செய்யலாம் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தேர்வுக்கான மதிப் பெண்கள், அனுபவம் மற்றும் தகுதிக்கான மதிப்பெண்களும் அரசாணையில் வெளியிடப் பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here