சிறந்த ஆசிரியர்களுக்கு தேச கட்டமைப்பாளர் விருது - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

சிறந்த ஆசிரியர்களுக்கு தேச கட்டமைப்பாளர் விருது

சிறந்த ஆசிரியர்களுக்கு தேச கட்டமைப்பாளர் விருது

ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரி சார்பில் சிறந்த ஆசிரியர்களுக்கு தேசக் கட்டமைப்பாளர் விருது சனிக்கிழமை வழங்கப்பட்டது.ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரி, காஸ்மாஸ் ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து இவ்விழாவை நடத்தின. அகில இந்திய ரோட்டரி அறிவொளி இயக்கம் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த ஆசிரியர்களைத் தேர்வு செய்து சிறந்த ஆசிரியர்களுக்கு தேசக் கட்டமைப்பாளர் என்ற விருதினை வழங்கி வருகிறது. ஈரோடு மற்றும் சுற்று வட்டாரங்களிலுள்ள பல்வேறு பள்ளிகளில் பணிபுரியும் 22 சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, கல்லூரி செயலர் எஸ்.சிவானந்தன் தலைமை வகித்தார். கல்லூரித் தாளாளர் ஆர்.மோகன்ராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பெ.அய்யண்ணன், ஆசிரியர்களுக்கு தேசக் கட்டமைப்பாளர் விருதை வழங்கினார். ரோட்டரி மாவட்டத் துணை ஆளுநர் சி.ரவிச்சந்திரன், கல்லூரி முதல்வர் எல்.பூபதி, காஸ்மாஸ் ரோட்டரி சங்கத் தலைவர் எம்.தனசேகர், செயலாளர் எல். குமரவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here