கருணாநிதி போராட்டத்தை தூண்டிவிடுகிறார்: அமைச்சர் கே.சி.வீரமணி குற்றச்சாட்டு
ஆசிரியர்களின் போராட்டத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார். சென்னை போரூரில் நடந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற அவர் புதியதலைமுறையின் செய்தியாளரிடம் இதனை தெரிவித்தார். மேலும், பள்ளிகள் வழக்கம் போல செயல்படுவதாகவும், திமுக தலைவர் கருணாநிதி தான் ஆசிரியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தை தூண்டி விடுவதாகவும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி குற்றம்சாட்டினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக