‘‘ஆசிரியர்கள் போராட்டம் ஆட்சிக்கு பெரிய சிக்கலை உருவாக்கிவிட்டதாமே?”-மிஸ்டர் கழுகு:ஜூனியர் விகடன்
‘‘ஆசிரியர் சங்கங்களின் கூட்டு குழுவான ஜாக்டோ அமைப்பு கடந்த 8-ம் தேதி தமிழகத்தில் பள்ளிகளில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தியது. ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் முக்கியமான கோரிக்கை 6-வது ஊதிய ஊயர்வு கமிஷன் நிர்ணயித்த சம்பள விகிதங்களில் உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும் என்பது. இதை வைத்து ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் சங்கங்கள் நீண்ட நாள் போராட்டங்கள் நடத்தி வந்தன. ஆசிரியர் சங்கங்களின் இந்தப் போராட்டம் சட்டசபை தேர்தலில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று உளவுத் துறையினர் ஆளும் கட்சி மேலிடத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர். இதையடுத்து தலைமைச்செயலகத்தில் அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் தலைமையில் தலைமைச்செயலாளர், நிதித்துறை செயலாளர், பொதுத்துறை செயலாளர் ஆகியோர் கூடிய அவசர கூட்டம் நடந்தது. இதையடுத்து நிதித் துறை செயலாளர் சண்முகம் அனைத்து துறை முதன்மைச் செயலாளர்களுக்கும் ஓர் உத்தரவை அவசர அவசரமாக அனுப்பி வைத்தார். அதில் 6-வது ஊதியக்குழுவில் என்னென்ன முரண்பாடுகள் இருக்கின்றன. அதை எப்படி தீர்ப்பது என்று அறிக்கை அளிக்கும்படி அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது. விரைவில் ஆசிரியர்கள் பிரச்னை தீரலாம்!”
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக