அரசு உதவிபெறும் பள்ளி' போர்டு வைக்க உத்தரவு
அரசு உதவி பெறும் பள்ளி' என்ற, அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், 5,000 அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளின் ஆசிரியர்கள் ஊதியம் மற்றும் நிர்வாக செலவுகளை அரசே ஏற்றுக் கொள்கிறது. பல பள்ளிகள் அரசின் உதவியை பெற்றாலும், தனியார் சுயநிதி பள்ளிகள் போல, பொதுமக்களிடம் காட்டிக் கொள்கின்றன. இந்நிலையில், 'அரசு உதவி பெறும் பள்ளிகளின் நுழைவு வாயிலில், 'அரசு உதவிபெறும் பள்ளி' என்ற, அறிவிப்பு வேண்டும்' என, பா.ஜ., மாநில சட்டப்பிரிவு செயலர் சந்தர், சென்னை முதன்மை கல்வி அதிகாரியிடம் மனு கொடுத்தார்.இதை பரிசீலித்த முதன்மை கல்வி அதிகாரி அனிதா, அனைத்து அரசு உதவிபெறும் பள்ளிகளும், அரசு உதவிபெறும் பள்ளிக்கூடம் என, பள்ளி வாசலில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என, உத்தரவிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக