கற்பித்தலில் புதுமையான பயிற்சி - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

கற்பித்தலில் புதுமையான பயிற்சி

65 ஆயிரம் ஆசிரியர்களுக்கு விரைவில் கற்பித்தலில் புதுமையான பயிற்சி தமிழகம் முழுவதும் 65 ஆயிரம் ஆசிரியர்களுக்கு கற்பித்தலில் புதுமையான பயிற்சி அளிக்கப்பட உள்ளது.அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பில், ஸ்டெம் (STEM) எனப்படும் பயிற்சியின் மூலம் அறிவியல், கணிதம், தொழில்நுட்பம் ஆகிய பாடங்களை செயல்விளக்கங்கள் வாயிலாக நடத்துவதற்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 9, 10-ஆம் வகுப்புகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள், பட்டதாரிகள், விஞ்ஞானிகள் உள்ளிட்டோர் பயிற்சி அளிக்க உள்ளனர். இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்பட்டது என்றும் 65 ஆயிரம் ஆசிரியர்களுக்கும் விரைவில் பயிற்சி அளிக்கப்படும் என்றும் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here