பள்ளிப் பாடத்துடன் மாணவர்களுக்கு நற்பண்புகள் கற்பிக்கும் பயிற்சி:
ஆசிரியர்களுக்கு இன்று முதல் வழங்கப்படுகிறது பள்ளிப் பாடத்துடன் மாணவர்களுக்கு நற்பண்புகள் கற்பிப்பதற்காக ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான பயிற்சி சென்னையில் செவ்வாய்க்கிழமை (அக்.27) தொடங்குகிறது. மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் சார்பில் 6,7,8-ஆம் வகுப்புகளுக்குப் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தவும், ஒழுக்கத்தை நிலைநாட்டவும், நடைமுறை வாழ்வில் நற்பண்புகளைத் தானே உணரும் வகையில் உற்சாகம் அளிக்கவும் அந்த வகுப்புகளைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்காக ஆசிரியர் கையேடும் தயாரிக்கப்பட்டு, அந்தந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. நடுநிலைப் பள்ளிகளில் ஏற்கெனவே உள்ள நீதிநெறி பாடவேளையைப் பயன்படுத்தி வாரத்துக்கு ஒரு பாடவேளை என்ற முறையில் ஆண்டு முழுவதும் ஆசிரியர் கையேட்டில் கடைசிப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையைப் பின்பற்றி நற்பண்பு கல்வி வழங்கப்படும் என மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. மாநில அளவிலான கருத்தாளர்களுக்கு சென்னையில் அக்டோபர் 27, 28 தேதிகளிலும், மாவட்ட அளவில் நவம்பர் 2,3 ஆகிய தேதிகளிலும், ஒன்றிய அளவில் நவம்பர் 5,6 தேதிகளிலும் ஆசிரியர்களுக்கு இந்தப் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக