அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.நாளை ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.நாளை ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்

அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி .நாளை ஆசிரியர்கள் ஸ்டிரைக் ஆசிரியர்களின் 15 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக சென்னையில் நேற்று பள்ளி கல்வி அதிகாரிகளுடன் ஜேக்டோ அமைப்பினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து திட்டமிட்டபடி நாளை ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று ஜேக்ேடா அமைப்பு அறிவித்துள்ளது. இந்த வேலைநிறுத்தத்தில் 3 லட்சம் ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். தமிழகத்தில் தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கும் தொடக்க நடுநிலைப் பள்ளிகள், பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் உயர்நிலைப் மேனிலைப் பள்ளிகளில் இளநிலை பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் என 3 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 15 அம்ச கோரிக்கை: மத்திய அரசுக்கு இணையான ஊதியம், பழைய ஓய்வூதியம் தொடர வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு வழங்கும் ஊதியம் போன்று தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கும் தர ஊதியம் வழங்க வேண்டும், ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர். அரசு அலட்சியம்: ேகாரிக்கைகளை வலியுறுத்தி, மார்ச் மாதம் இடைநிலை, பட்டதாரி, முதுநிலைப் பட்டதாரி, தலைமை ஆசிரியர்கள் என 24 ஆசிரியர் சங்கங்கள் ஒன்றிணைந்து ஜேக்டோ அமைப்பை மீண்டும் தொடங்கினர். அந்த அமைப்பின் சார்பில் கடந்த மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 3 கட்டமாக போராட்டம் நடத்தினர். ஆனால் அரசுத் தரப்பில் ஜேக்டோ அமைப்பை அழைத்து யாரும் பேச்சுவார்த்தை நடத்த இல்லை. பேச்சு வார்த்தை: போராட்டத்தை தடுக்கும் வகையில், ஜேக்டோ அமைப்பினர் 3 கட்டமாக கூடிப்பேசினர். அதன்பேரில் அக்டோபர் 8ம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என்றும், அதே நாளில் அந்தந்த மாவட்ட தலை நகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என்றும் கடந்த மாதம் அறிவித்தனர். இதையடுத்து, தொடக்க கல்வித்துறை இயக்குநர் இளங்கோவன், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் ஆகியோர் ஜேக்டோ அமைப்பிடம் பேச்சு வார்த்தை நடத்துவது என முடிவு கடிதம் அனுப்பினர். இதன்பேரில் நேற்று மாலை 5 மணி அளவில் பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன், தொடக்க கல்வி இயக்குநர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலையில் பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடந்தது. இந்த பேச்சு வார்த்தையின் போது ஜேக்டோ அமைப்பில் உள்ள 24 சங்கங்களின் சார்பில் ரெங்கராஜன், தியாகராஜன், தாஸ், இளங்கோவன், சுரேஷ், அண்ணாத்துரை, சாமிசத்தியமூர்த்தி, மணிவாசகம், எத்திராஜ் உள்ளிட்ட போராட்டக் குழுவினர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அரசு பிடிவாதம்: சமாதான பேச்சுவார்த்தையில், இயக்குநர்கள் பேசியதாவது: ஆசிரியர்கள் கொடுத்துள்ள 15 அம்ச கோரிக்கைகளில் 9 கோரிக்கைகள் நிதித்துறை சார்ந்தவை. 6 கோரிக்கைகள் பொதுவானவை. அதிலும் 4 கோரிக்கைகள் சர்வீஸ் சம்பந்தமானது. 2 கோரிக்கைதான் பொதுவானது. சிபிஎஸ் தொடர்பான கோரிக்கையில் இறந்த ஆசிரியர்களளின் குடும்பத்தினருக்கு பணப்பயன் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளீர்கள். அவர்களுக்கு 8.7 சதவீத வட்டியுடன் வழங்கப்படும். அதற்கான அரசாணை இம்மாத இறுதிக்குள் வெளியாகும். 2004-2006ம் ஆண்டு தொகுப்பூதியம் தொடர்பான கோரிக்கையை அரசு பரிசீலித்து வருகிறது. அதற்கான பு்ள்ளி விவரம் எடுத்து வருகிறோம். இதற்கு ரூ. 170 கோடி தேவைப்படுகிறது. ஆசிரியர் தேர்வு என்பது கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் உள்ளது. இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையான தர ஊதியம் கொடுக்க வேண்டும் என்பது இப்போது சாத்தியம் இல்லை. அடுத்த பேகமிஷனில் பார்த்துக் கொள்ளலாம். இயக்குநர்கள் இவ்வாறு தெரிவித்தனர். பேச்சு வார்த்தை தோல்வி: அதிகாரிகளின் பதிலால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆசிரியர்கள் தர ஊதியம் அடுத்த பே கமிஷன் வரை காத்திருக்க முடியாது. இன்றைய தேதியில் இருந்தாவது அதை வழங்க வேண்டும். அது தொடர்பாக அரசு தரப்பில் அறிவிப்பு வெளியிட வேண்டும். இதில் நாங்கள் சமரசம் செய்து கொள்ளமாட்டோம். அரசு இன்னும் காலம் கடத்தினால் வேலை நிறுத்தப் போராட்டம் திட்டமிட்டபடி நடக்கும் என்று தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் சார்பில் பாலசந்திரன் தெரிவித்தார். இதையடுத்து, இது குறித்து அரசுக்கு தெரிவித்து முதல்வரரின் பார்வைக்கு கொண்டு செல்கிறோம் என்று இயக்குநர்கள் தெரிவித்தனர். இதில் சமாதானம் அடையாத ஆசிரியர்கள் பேச்சு வார்த்தியில் எங்களுக்கு திருப்தி இல்லை என்று தெரிவித்து வெளியில் வந்தனர். போராட்ட குழு பேட்டி: ஜேக்டோ அமைப்பின் போராட்டக்குழுவினர் நிருபர்களிடம் கூறியதாவது: கல்வி துறை அதிகாரிடம் நடத்திய பேச்சு வார்த்தையில் எங்களுக்கு திருப்தி இல்லை. பெரும்பாலான கோரிக்கைகள் நிதித்துறை சார்ந்தவை என்பதால் நிதித்துறையிடம் பேசித்தான் முடிவு எடுப்போம் என்கிறார்கள். தமிழக அளவிில் 3 கட்ட போராட்டம் நடத்திய பிறகும் இது குறித்து தெரியாததுபோல அதிகாரிகள் பேசுகின்றனர். இனிமேல் தான் அரசுக் தெரிவிக்கப் போகிறோம் என்கின்றனர். இது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. எனவே ஜேக்டோ அறிவித்தபடி 8ம் தேதி வேலை நிறுத்தம் நடக்கும். அன்று 11 மணி முதல் 12 மணி வரை அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டமும் நடக்கும். இந்த வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதிலும் 3 லட்சம் இடைநிலை, இளநிலை பட்டதாரி, முதுநிலைப் பட்டதாரி, தலைமை ஆசிரியர்கள் ஈடுபடுவார்கள். ஜேக்டோ அமைப்பை உடைக்க முயற்சி ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் தொடர்பாக ஜேக்டோ அமைப்பினரை நேற்று பேச்சு வார்த்தைக்கு அழைத்திருந்த நிலையில், போட்டி சங்கமான ஜாக்டா அமைப்பினர் நேற்று காலையில் தலைமைச் செயலகம் சென்று பள்ளிக் கல்வித்துறை செயலாளரை சந்தித்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடமாட்ேடாம் என்று தெரிவித்தனர். ஆனால் மாலையில் ஜேக்டோ அமைப்பினரை பள்ளிக் கல்வி இயக்குநர் மட்டத்தில் பேச்சு வார்த்தை நடத்த அழைத்திருந்தது அரசு. பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ஜேக்டோ அ மைப்பை உடைத்து ஆதரவு சங்கங்களின் மூலம் பள்ளிகளை நடத்த அரசு முயற்சிக்கிறது என ஆசிரியர்கள் குற்றம்சாட்டினர். வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்யவும் அரசு முடிவு செய்திருக்கிறது என்றும் ஆசிரியர்கள் தெரிவித்தனர். தகவல்  நன்றி.tntam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here