புதிய மாவட்டம் - கமுதி மாவட்டம் உருவாக வாய்ப்பு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

புதிய மாவட்டம் - கமுதி மாவட்டம் உருவாக வாய்ப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தை பிரித்து கமுதி மாவட்டம் உருவாக்க அறிக்கை கேட்கிறது அரசு

ராமநாதபுரம் மாவட்டத்தை பிரித்து புதிய கமுதி மாவட்டம் உருவாக்க அரசுஅறிக்கை கேட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் 8 வட்டங்கள், 38 உள்வட்டங்கள், 400 வருவாய் கிராமங்கள் உள்ளன. மொத்தம் 13.53 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இதில் கமுதி, கடலாடி, முதுகுளத்தூர் வட்டங்கள் சுதந்திரம் பெற்று 68 ஆண்டுகள் ஆகியும் இன்னும் ரயில்பாதை அமைக்கப்படவில்லை. இங்கு சரியான குடிநீர், போக்குவரத்து, தொழில் வசதிகள் இல்லை.இதனால் கமுதியை தலைமை யிடமாகக் கொண்டு புதிய மாவட்ட மாக அறிவிக்க வேண்டும் எனவும், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இரண்டு வட்டங்களை பிரித்து புதிய வட்டங்களை உருவாக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில, மாவட்ட அமைப்பு தீர்மானம் நிறைவேற்றி, அதை 24.8.15-ல் அரசிடம் அளித்தது.`கமுதி, முதுகுளத்தூர், கடலாடி, புதிதாக பிரிக்கப்படும் பார்த்தி பனூர், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருச்சுழி ஆகிய 5 வட்டங் களை இணைத்து கமுதியை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும். ராமநாதபுரம், பரமக்குடி, ராமேசுவரம், திருவாடானை, கீழக் கரை மற்றும் புதிதாக பிரிக்கப் படும் ஆர்.எஸ்.மங்கலம், நயினார் கோவில் ஆகிய 7 வட்டங்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் இடம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் அரசிடம் கோரிக்கை வைத்தனர்.அதனடிப்படையில் வருவாய்த் துறை இணைச் செயலாளர் எழிலரசு, புதிதாக கமுதி மாவட்டம் மற்றும் ஆர்.எஸ்.மங்கலம், நயினார் கோவில் புதிய வட்டங்களை உருவாக்குவது குறித்த அறிக்கை யை, அரசுக்கு அனுப்புமாறு வருவாய் நிர்வாக கூடுதல் ஆணையருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். இதன் மூலம் கமுதி புதிய மாவட்டம் உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் தமீம்ராஜா கூறியதாவது, ராமநாத புரம் மாவட்டத்தில் கமுதி, முதுகுளத் தூர், கடலாடி பகுதிகள் இன்னும் பின்தங்கிய பகுதிகளாகஉள்ளன. அதனால் கமுதியை தலைமையி டமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும், ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி, திருவாடானை வட்டங்களில் சில உள்வட்டங்களை பிரித்து 2 புதிய வட்டங்கள் உருவாக்க வேண்டும் என தமிழக அரசுக்கு, சங்கம் சார்பில் கோரிக்கை விடுத்தோம்.எங்களது கோரிக்கையை ஏற்று, புதிதாக கமுதி மாவட்டம் உருவாக நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வர் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இதன் மூலம் பின்தங்கிய கமுதி, கடலாடி, முதுகுளத்தூர் பகுதிகள் பல்வேறு தொழில்வளம் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றார்.

இதனைப்போன்றே திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசியை மையமாக வைத்து புதிய மாவட்டம் உருவாக்க மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here