தமிழ்நாட்டுப் பொருளாதாரம்
தமிழ்நாட்டுப் பொருளாதாரம்
தரவரிசை
நாணயம்இந்திய ரூபாய்
புள்ளி விவரம்
மொ.உ.உ72,311 கோடி ரூபாய் (2013) வெளிக்கூறுகள்
பொது நிதிக்கூறுகள் வருவாய்46518.77 கோடி
செலவினங்கள்45601.12 கோடி '
இந்தியா லாண்ட் டெக் பார்க்,அம்பத்தூர் தமிழ்நாட்டுப் பொருளாதாரத்தில் (ஆங்கிலம்: Economy of TamilNadu) சேவைத் துறை 45%, தொழில் துறை 34%, விவசாயம் 21% பங்களிக்கின்றன.
தமிழ்நாடு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் (2013–14) இந்தியாவின் மாநிலங்களில் நான்காவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது. கோயம்புத்தூர் நெசவாலைகளுக்கும், ஈரோடு மஞ்சள் சாகுபடி மற்றும் ஆடை ஏற்றுமதிக்கும், திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கும், சேலம் இரும்பு உருக்கு ஆலைகளுக்காகவும், நாமக்கல் கோழிப் பண்ணைகள், குழாய்க் கிணறு அமைக்கும் தொழில், பண்டங்களைப் போக்குவரவு செய்யும் கனரக வாகனங்களை இயக்கும் தொழிலுக்காகவும்,(http://sivakasiteacherkaruppasamy.blogspot.com)
(http://Sivakasipeople.blogspot.com )
சிவகாசி அச்சுத் தொழில், பட்டாசு உற்பத்திக்கும், காவிரி பாசன பகுதியில் அமைந்துள்ள திருச்சி, வேலூர் தோல் தொழிலுக்கும், தஞ்சை போன்ற பகுதிகள் விவசாயத்திற்கும், சென்னை வாகன உற்பத்தி, தகவல் தொழில் நுட்பம் சார்ந்த தொழில்களுக்கும் பெயர் பெற்றுள்ளன. தென்தமிழகத்தில் உள்ள தூத்துக்குடியில் தமிழகத்தின் இரண்டாவது பெரிய துறைமுகம் உள்ளது. தூத்துக்குடியில் மின்னுற்பத்தி நிலையங்களும், உர, உலோகத் தொழிற்சாலைகளும் உள்ளன. கரூரில் நெசவுத்தொழிலும், பேருந்து, சரக்குந்துகளுக்கு கூடு கட்டும் தொழிலும் நன்கு வளர்ந்துள்ளன. பெங்களூருக்கு அருகில் உள்ள ஓசூரில் தானுந்துத் தொழிற்சாலைகள் (அசோக் லேலண்டு, டிவிஎஸ்), மற்ற இயந்திரத் தொழிற்சாலைகளும் (டைட்டன்) உள்ளன. பாலிவுட் என அழைக்கப்படும் மும்பை திரைப்படத் துறைக்கு அடுத்ததாக, தமிழகத் திரைப்படத்துறை இந்தியாவின் இரண்டாவது பெரிய திரைப்படத் தொழில் மையமாகவும் திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும், பெருமளவில் தமிழ் மற்றும் தென்னிந்திய மொழிகளில் சினிமாப் படங்கள் தமிழ் நாட்டில் தயாரிக்கப்படுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக