அதிகமான நோபல் பரிசு பிரிட்டனில் படித்தவர்களுக்கே!
நோபல் பரிசு பெற்றவர்களில் மூன்றில் ஒரு பங்கினர், பிரிட்டனில் உயர்கல்வி படித்தவர்கள் என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட பிரிட்டிஷ் கவுன்சில் அமைப்பு தனது ஆய்வின் முடிவில் தெரிவித்ததாவது : கடந்த 1901ம் ஆண்டு முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டுவருகிறது. இதுவரை 860 பேருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் 131 பேர் தங்கள் கல்வியின் ஒருபகுதியை வெளிநாட்டில் படித்தவர்கள். இதில் 38 சதவீதத்தினர் பிரிட்டனின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களான ஆக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் போன்றவற்றில் உயர்கல்வி படித்தவர்கள். இவ்வரிசையில் 2வது மற்றும் 3வது இடங்கள் முறையே அமெரிக்கா, ஜெர்மன் பல்கலைகழகங்கள் வகிக்கின்றன. பிரிட்டனில் படித்து நோபல் பரிசு வென்ற வெளிநாட்டவர்களில், அதிகபட்சமாக கேம்பிரிட்ஜ் பல்கலை.,யில் 18 பேர் படித்துள்ளனர். ஆக்ஸ்போர்ட் பல்கலை.,யில் 11 பேரும், லண்டன் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸில் 5 பேரும் படித்துள்ளனர். தற்போது பிரிட்டனில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் 5 லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் உயர்கல்வி கற்று வருகின்றனர். இங்கிலாந்தை சேர்ந்த மாணவர்கள் 91 பேர் இதுவரை நோபல் பரிசு பெற்றுள்ளனர். இதிலும் கேம்பிரிட்ஜ் பல்கலை., 48 மாணவர்களுடன் முன்னிலை வகிக்கிறது. இதற்கு அடுத்த இடங்கள் முறையே ஆக்ஸ்போர்ட்(17) மற்றும் மான்செஸ்டர்(7) பல்கலைகழகங்கள் பிடித்துள்ளன. இவ்வாறு அந்த ஆய்வு அறிக்கை தெரிவிக்கறது. பிரிட்டனில் பயின்று, மருத்துவத்துறையில் 17 பேரும், இயற்பியல், வேதியியலில் தலா 8 பேரும், பொருளாதாரத்தில் 7 பேரும், அமைதி, இலக்கியத்திற்கு தலா 5 பேரும் நோபல் பரிசு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக