நடுநிலைப் பள்ளியில் கலை வழிக் கற்றல் பயற்சி பட்டறை தேவகோட்டை-சிவகங்கை மாவட்டம்
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் கலை வழிக் கற்றல் பயற்சிப் பட்டறை நடைபெற்றது. நிகழ்வுக்கு வந்திருந்தோரை ஆசிரியை முத்து மீனாள் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்.தேவகோட்டை உதவி தொடக்க கல்வி அலுவலர் லெட்சுமி தேவி தலைமை ஏற்று மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.நிகழ்ச்சியில் உதவி தொடக்க கல்வி அலுவலர் மாணவ ,மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றதற்காக பரிசுகளையும்,சான்றிதழ்களையும் வழங்கினார்.கலைவழிக் கற்றலை நடத்தக் கூடிய திருவண்ணாமலை பாஸ்கர் ஆறுமுகம் ,அபிலாஸ் ,பிரவின் ஆகியோர் கொண்ட குழு மாணவர்களுக்கு பயற்சி அளித்தனர்.முதலில் பள்ளி மாணவர்களுக்கு கதைகள் கூறினர்.பாடல்கள்,டாகுமெண்டரி படங்கள் போட்டு காண்பித்தனர்.பிறகு மாணவர்களை மூன்று குழுக்களாக பிரித்து மாணவர்களுக்கு தகுந்தாற்போல் கதைகள் சொல்லி ,பொம்மைகள் செய்ய வைத்து,பொம்மலாட்டம் மூலம் அவர்களை கதை சொல்ல வைத்தனர். மாணவர்களையே கதை எழுத வைத்தும்,ஓவியம் வரைய வைத்தும் சொல்லி கொடுத்தனர். மாணவர்களுக்கு நாடகம் முதலியவற்றை சொல்லி கொடுத்ததும் அவர்களாகவே நாடகங்களை தயாரித்தும்,பொம்மைகளை தானாகவே செய்து பொம்மைகள் மூலம் நாடகத்தை செய்து காண்பிக்கும் வண்ணம் கற்றுக் கொடுத்தனர்.மாணவர்களை குழுக்களாக அமரவைத்து அவர்களிடம் குழு மனப்பான்மையை வளர்க்கும் வண்ணம் மிக அழகாக கற்று கொடுத்தனர். கலை வழிக் கற்றல் நிகழ்ச்சி நடத்தி வரும் திருவண்ணாமலை பாஸ்கர் கூறுகையில் ,எங்கள் குழு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பயிற்சி அளித்து வருகிறோம்.ஒரு நாள்,இரண்டு நாள் என கால அவகாசம் எடுத்து மாணவர்களுக்கு முற்றிலுமாக எளிய வகையில் புரியும் வண்ணம் நிகழ்ச்சியை நடத்தி காண்பிக்கின்றோம்.எங்கள் பய்ர்சியின் மூலம் மாணவர்களிடையே நாள் குழு மனப்பான்மை ஏற்படுகிறது.கல்லூரியில் மட்டுமே குழு மனப்பான்மை உள்ளது.அதனை ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளி அளவிலும் கொண்டுவருவதே எங்கள் நோக்கமாகும்.எங்கள் பயிற்சியின் மூலம் மேடையில் பேச தயங்கும் குழந்தை கூட கூட்சதை போக்கி விட்டு நன்றாக பேசும்.அவ்வாறு பேச வைப்பதே எங்கள் வெற்றி.கேள்வி அறிவை உருவாக்கி வருகிறோம். அரசு பள்ளிகளை மட்டுமே நாங்கள் நோக்கி போகிறோம்.எங்கள் குழுவின் நோக்கம் இவை அனைத்தையும் இலவசமாக வழங்குவதே ஆகும்.என்னுடன் திருவண்ணாமலை பிரவின்,அபிலாஷ்,செய்யாறில் ஆனந்த்,திண்டுக்கல் நவீன் என குழுவினர் தொடர்ந்து பள்ளிகளுக்கு சென்று பயற்சி அளித்து வருகிறோம்.நாங்கள் எங்கள் போக்குவரத்துக்கு மற்ற செலவுகளுக்கு மண் மனம் என்ற சிறு தான்யங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் கம்பெனி நடத்தி வருகிறோம்.அதில் இருந்து கிடைக்கும் வருவாயின் மூலம் பள்ளிகளுக்கு இலவசமாக பயற்சிக்கு செல்கிறோம்.நாங்கள் வகுப்பறை ஜனநாயகத்தை குறிக்கோளாக கொண்டிருக்கிறோம்.சிவகங்கை,ராமநாதபுரம்,புதுகோட்டை,விருதுநகர்,திருநெல்வேலி ,கன்னியாகுமரி உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்தான் முதலில் செய்கிறோம்.இப்பள்ளி மாணவர்கள் மிக அருமையாக தங்கள் தகவல்களை எடுத்து கூறுகின்றனர்.அவர்களுக்கும்,ஆசிரியர்களுக்கும்,தலைமை ஆசிரியர்க்கும் எனது பாராட்டுக்கள்.எங்கள் குழுவை தொடர்பு கொள்ள 99442036236,99944 23012 என்ற என்னை தொடர்பு கொள்ளலாம்.பள்ளிகளுக்கு சென்று பயற்சி அளிக்க தயாராக இருக்கிறோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார். மாணவர்கள் ஐயப்பன்,ரஞ்சித்,வசந்தகுமார்,மாணவிகள் ராஜேஸ்வரி,தனம்,திவ்ய தர்சினி உட்பட பல மாணவர்கள் நாடகங்களை நடித்து காண்பித்து கைதட்டு வாங்கினர். ஆசிரியை முத்து லெட்சுமி நன்றி கூறினார்.மாணவ,மாணவியர் ஆர்வமுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிபடுத்தினார்.சிவகங்கை,ராமநாதபுரம்,புதுகோட்டை உட்பட தென் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் முதன் முறையாக இந்த நிகழ்ச்சி இப்பள்ளியில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியை சாந்தி செய்து இருந்தார். பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் கலை வழிக் கற்றல் பயற்சிப் பட்டறை நடைபெற்றபோது தேவகோட்டை உதவி தொடக்க கல்வி அலுவலர் லெட்சுமி தேவி பேசினார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக