வால்வெள்ளியை சுற்றி தூய ஆக்சிஜன்: விஞ்ஞானிகள் அதிர்ச்சி - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

வால்வெள்ளியை சுற்றி தூய ஆக்சிஜன்: விஞ்ஞானிகள் அதிர்ச்சி

வால்வெள்ளியை சுற்றி தூய ஆக்சிஜன்: விஞ்ஞானிகள் அதிர்ச்சி.

பூமியின் தோற்றம்,பூமியில் உயிரினங்களின் தோற்றம் மற்றும் சூரிய மண்டலத்தின் தோற்றம் பற்றிய அறிவியற் கோட்பாடுகளை கேள்விக்குறியாக்கும் வகையில் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சமீபத்திய கண்டுபிடிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பூமியில் இருந்து பல மில்லியன் கிலோமீற்றர்களுக்கு அப்பால் சூரியனை சுற்றி வந்து கொண்டிருக்கும் வால்வெள்ளி அல்லது தூமகேதுவை துரத்திப் பிடித்து ஆய்வு செய்து வரும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு கூடத்துக்குச் சொந்தமான ஆய்வுக்கலம் Rosetta அது ஆய்வு செய்த தூமகேது (67P) இன் சிறிய வாயு மண்டலத்தில் தூய ஒக்சிசன் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளது. மேற்படி தூமகேது சூரிய மண்டலம் தோன்றிய போது உருவாகியதாக நம்பப்படும் நிலையில் அதைச் சுற்றி எப்படி தூய ஆக்சிஜன் வந்தது என்ற கேள்வி விஞ்ஞானிகளின் மூளையை குடைய ஆரம்பித்துள்ளது. அதற்கான விடை விண்வெளி பற்றிய நடைமுறைக் கோட்பாடுகள் பலவற்றை பொய்ப்பிக்கும் அல்லது மீளமைக்கும் வகையில் அமையலாம் என்று கருதப்படுகிறது. மேற்படி தூமகேது 67P சில கிலோமீற்றர்களே பருமனைக் கொண்டதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here